[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 23 Aug, 2018 08:51 am
  • அ+ அ-

மேஷம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். புண்ணியத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

ரிஷபம்: உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். எதிர்பார்த்த வேலைகள் இழுபறிக்குப் பின்னர் முடியும். 

மிதுனம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் தெரியும். சில காரியங்களில் முன்னெச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது.

கடகம்: எவ்விதத் தடையுமின்றி வேலைகளை மளமளவென்று முடிப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பண வரவு உண்டு.

சிம்மம்: நண்பர்களால் ஆதாயம் உண்டு. அக்கம்பக்கத்து வீட்டாரின் தொல்லை குறையும். உறவினர், நண்பர்களின் சுயரூபம் தெரிய வரும். வீடு, வாகனம் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கன்னி: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள்.

துலாம்: உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலகி நின்ற சொந்தபந்தங்கள் விரும்பி வருவார்கள். 

தனுசு: உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

மகரம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சகோதரர் வகையில் அலைச்சல் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும்.

கும்பம்: திட்டமிட்டக் காரியங்கள் கைகூடும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

மீனம்: உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வீட்டை ரசனைக்கேற்ப புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள்.


போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close