[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 22 Aug, 2018 08:55 am
  • அ+ அ-

மேஷம்: விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அடமானத்தில் இருந்த நகைளை மீட்பீர்கள். பூர்வீகச் சொத்தை நல்ல விலைக்கு விற்று புது வீடு வாங்குவீர்கள்.

ரிஷபம்: கையிருப்பு கரையும். மனம் அமைதியற்று அலைபாயும். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது குற்றம்சாட்டுவார்கள்.

மிதுனம்: பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வார்கள். வீடு, வாகனம் வாங்குவீர்கள். பழுதான மின்சாதனங்களை மாற்றுவீர்கள். திருமண முயற்சிகள் பலிதமாகும்.

கடகம்: தயக்கம், தடுமாற்றம், பயம் எல்லாம் நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். பால்ய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

சிம்மம்: பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். குடும்பத்தினர் உங்களின் ஆலோசனையை ஏற்பார்கள். மற்றவரிடத்தில் எப்படிப் பேச வேண்டும் என்பதில் தெளிவு பிறக்கும்.

கன்னி: செல்வாக்கு உயரும். தோற்றப் பொலிவு கூடும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.

துலாம்: பிரச்சினைகளைக் கண்டு அஞ்சமாட்டீர்கள். அரசியல்வாதிகள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: பழைய இனிய சம்பவங்கள் அவ்வப்போது நினைவுக்கு வரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

தனுசு: குடும்பத்தில் திடீர் சலசலப்புகள் வந்து நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

மகரம்: அடுத்தடுத்து செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் ஈகோ பிரச்சினைகள் ஏற்படக் கூடும். யாருக்கும் உத்தரவாதமோ, ஜாமீனோ தரவேண்டாம்.

கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

மீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வீடு, வாகனம் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

 

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close