[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 21 Aug, 2018 08:31 am
  • அ+ அ-

மேஷம்: அலைச்சல் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பின் பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

ரிஷபம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

மிதுனம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களைச் சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும்.

கடகம்: பழைய இனிய சம்பவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன்  - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகனச் செலவுகள் நீங்கும்.

சிம்மம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய ஈகோ பிரச்சினை விலகும். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

கன்னி: சவாலான வேலைகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க வேலைகள் உடனே முடியும்.

துலாம்: மனக்குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். திடீர் பயணம் உண்டு.

விருச்சிகம்: அதிரடியாகச் செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. சிந்தனைத் திறன் அதிகரிக்கும்.

தனுசு: வேலைச் சுமையால் பதற்றம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன், உத்தரவாதம் தரவேண்டாம்.

மகரம்: மனஉளைச்சல் நீங்கும். குடும்பத்தினருடன் கலகலப்பாக சிரித்துப் பேசுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பயணம் வீண் அலைச்சலைக் கொடுக்கும்.

கும்பம்: குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். மனக்குழப்பம் நீங்கும்.

மீனம்: இழுபறியாக இருந்த காரியங்கள் திடீரென முடிவுக்கு வரும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close