[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 20 Aug, 2018 09:16 am
  • அ+ அ-

மேஷம்: முக்கிய முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள். சகோதர வகையில் அலைச்சல், செலவு இருக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி தாமதமாகும். ஆன்மிக நாட்டம் கூடும்.
ரிஷபம்: நீங்கள் எதிர்பார்த்திருக்கும் நல்ல சேதி இன்று வரும் கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். கலை, இசை, பொழுதுபோக்குகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மிதுனம்: சவால்கள், எதிர்ப்புகளை முறியடித்து முன்னேறுவீர்கள். தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்களை முழு மூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.
கடகம்: புதிய திட்டங்களுக்கு வழிவகுப்பீர்கள். பிரபலங்களின் துணையுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.
சிம்மம்: தடைபட்டிருந்த வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடியும். நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, அணிகலன் சேரும்.
கன்னி: நம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். தைரியமாக செயல்பட்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் உணர்வுக்கு மதிப்பளிப்பார்கள்.
துலாம்: எதிர்காலத் திட்டங்களைப் பற்றி யோசிப்பீர்கள். வரவேண்டிய இடத்தில் இருந்து பணம் வரும். ஆடை, ஆபரணம் சேரும். குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பீர்கள்.
விருச்சிகம்: வெளி வட்டாரத்தில் நிதானம் தேவை. கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
தனுசு: குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் கூறவேண்டாம். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள்.
மகரம்: பணப் பற்றாக்குறை நீங்கும். வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் உதவுவார்கள்.
கும்பம்: சுயமாக செயல்பட்டு தைரியமாக முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகளின் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பேச்சில் பொறுமை தேவை.
மீனம்: சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சொத்துப் பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். பழைய கடன்களை பைசல் செய்வீர்கள். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close