[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 19 Aug, 2018 09:37 am
  • அ+ அ-

மேஷம்: ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். அறிமுகமில்லாதவர்களை வீட்டினுள் அனுமதிக்க வேண்டாம். புண்ணியத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

ரிஷபம்: வீட்டின் அடிப்படை வசதிகள் பெருகும். கனிவானப் பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

மிதுனம்: சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.  கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த பழைய உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

கடகம்: எதையும் சாதித்துக் காட்டும் மன வலிமை பிறக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த தொகை இன்று கைக்கு வரும். கனிவானப் பேச்சால் காரியத்தை சாதிப்பீர்கள்.

சிம்மம்: வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களின் உதவி கிடைக்கும். வீட்டை நவீன வசதிகளுடன் மாற்றியமைப்பது குறித்து யோசிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கன்னி: புதியவர்கள் அறிமுகமாவார்கள். வரவேண்டிய பணம் இழுபறிக்குப் பின்னர் கைக்கு வரும். செலவுகளைக் குறைத்து வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள்.

துலாம்: அனுபவப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள். பண வரவு சரளமாக இருக்கும். உறவினர், நண்பர்களின் சுயரூபத்தைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள்.

விருச்சிகம்: அடிக்கடி கோபப்படுவீர்கள். சில சமயங்களில் மனம் நிம்மதி இல்லாமல் அலைபாயும். திட்டவட்டமாகச் செயல்பட முடியாமல் தடுமாறுவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

தனுசு: வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். யாருக்கும் பணம் கொடுக்கல், வாங்கலில் தலையிடவோ, ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திடவோ வேண்டாம்.

மகரம்: தேவைக்கேற்ப பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த கடனையும் பைசல் செய்வீர்கள். பங்கு வர்த்தகம் லாபகரமாக இருக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

கும்பம்: பிரபலமானவர்கள், அரசியல்வாதிகளின் அறிமுகம் கிடைக்கும். தொடங்கிய பணிகள் தடையின்றி உடனே முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். 

மீனம்: தொட்ட காரியம் துலங்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு மனைவிவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close