[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 18 Aug, 2018 08:52 am
  • அ+ அ-

மேஷம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். பழைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். எந்தக் காரியத்திலும் அவசரப்பட வேண்டாம்.

ரிஷபம்: உங்களது பேச்சு, செயலில் புத்திசாலித்தனம் தெரியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். 

மிதுனம்: பழைய நண்பர்கள் துணையுடன் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

கடகம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தினரின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம்: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.

கன்னி: தடுமாற்றங்கள் நீங்கும். காரியங்களை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

துலாம்: எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவ்வப்போது வரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கவனியுங்கள். சில காரியங்களில் தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்: வீண் செலவு, அலைச்சல் வரும். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அளவுக்கு மீறி உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் வீண் விவாதங்கள் வந்து போகும்.

தனுசு: எதிலும் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

மகரம்: திட்டமிட்டக் காரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

கும்பம்: நெடுநாட்களாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் உண்டாகும்.

மீனம்: மனப்போராட்டம், ஒருவித பயம் இருக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. விருந்தினர்களின் திடீர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close