[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 17 Aug, 2018 08:51 am
  • அ+ அ-

மேஷம்: அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும்.

ரிஷபம்: குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும்.

மிதுனம்: அழகு, இளமை கூடும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் பெருமை கிடைக்கும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

கடகம்: தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கவுரவிக்கப்படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு மறுக்காமல் உதவுவீர்கள். குறுக்கு வழியில் ஆதாயம் தேட முயற்சிக்க வேண்டாம்.

சிம்மம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை இனம் காண்பீர்கள். ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.

கன்னி: இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்வார்கள்.

துலாம்: சிறுசிறு அவமானம், ஏமாற்றம் வந்து போகும். யாருக்காகவும் சாட்சி, ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அளவுடன் பழகுங்கள்.

விருச்சிகம்: அலைச்சல், வேலைப்பளு அதிகரிக்கும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

தனுசு: சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது இடம் வாங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

மகரம்: மனோபலம் அதிகரிக்கும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் எவ்விதத் தடையுமின்றி நிறைவேறும்.

கும்பம்: திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பழைய சொந்தங்கள் தேடிவரும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலைக்கேற்ப பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

மீனம்: அடுத்தவர் விவகாரத்தில் அநாவசியமாகத் தலையிடாதீர்கள். பணம் விஷயத்தில் நண்பர்கள், உறவினர்களுடன் பகை உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close