[X] Close

ஆவணி மாதப் பிறப்பு: தர்ப்பணம் செய்ய மறக்காதீங்க!


aavani-tharppanam

  • வி.ராம்ஜி
  • Posted: 16 Aug, 2018 16:49 pm
  • அ+ அ-

ஆவணி மாதம் நாளைய தினம் 17.8.18 வெள்ளிக்கிழமை அன்று பிறக்கிறது. மாதந்தோறும் தமிழ் மாதப்பிறப்பில், முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து வழிபடச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.

மாதந்தோறும் வருகிற தமிழ் மாதப் பிறப்பு, மாதந்தோறும் வருகிற அமாவாசை, கிரகண காலங்களில் என தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபடச் சொல்கிறது தர்ம சாஸ்திரம். ஆக மொத்தம் வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் உள்ளன என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். ஆடி அமாவாசை ரொம்பவே சிறப்பு வாய்ந்தது என்று போற்றுகிறது சாஸ்திரம். இந்த ஆடி மாதம் முடிந்து, நாளைய தினம் 17.8.18 வெள்ளிக்கிழமையில் பிறக்கிறது, ஆவணி மாதம்.

இந்த மாதப் பிறப்பு நாளில், நாளைய தினத்தில், முன்னோர் ஆராதனையை மறக்காமல் செய்யுங்கள். தர்ப்பணம் செய்து முன்னோர் ஆசியை வேண்டுங்கள்.

முடிந்தால், இயலாதவர்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்குங்கள். பித்ருக்கள் ஆசி கிடைத்து, நீங்களும் உங்கள் குடும்பமும் சீரும் சிறப்புமாக வாழ்வீர்கள் என்பது உறுதி!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close