[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 16 Aug, 2018 09:05 am
  • அ+ அ-

மேஷம்: தன்னம்பிக்கை பெருகும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் நன்மை உண்டு. நவீன ரக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்: பிரச்சினைகளை எதிர்கொண்டு அதை தீர்க்கும் சக்தியும், மனஉறுதியும் உங்களுக்கு கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

மிதுனம்: மனக் குழப்பங்கள் நீங்கி நிம்மதி ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். மனைவியுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சினைகள் விலகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கடகம்: மனஇறுக்கம் விலகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆன்மிக விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, வாகனம் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

சிம்மம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர், உறவினர்கள் வருகையாலும் வீடு களைகட்டும்.

கன்னி: காரியத் தடைகள் நீங்கும். பிரச்சினைகளை தீர்க்க புதுவழி கிடைக்கும். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.

துலாம்: மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள்.

விருச்சிகம்: எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. வேற்றுமொழி பேசுபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புண்ணியத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

தனுசு: விலை உயர்ந்த நவீன மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

மகரம்: பெரிய பொறுப்புகள் தேடி வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

கும்பம்: புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. எதிர்காலத்துக்கென திட்டங்கள் தீட்டுவீர்கள். மூத்த சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.

மீனம்: செலவுகளைக் குறைத்து சிக்கனமாக இருப்பது நல்லது. தர்மசங்கடமான சூழ்நிலை அவ்வப்போது ஏற்படும். வீண் பழிச் சொல் வரும். சகோதரர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

 

 

 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close