[X] Close

தோஷமெல்லாம் போக்குவார் கருடாழ்வார்! - இன்று கருட பஞ்சமி


garuda

  • வி.ராம்ஜி
  • Posted: 15 Aug, 2018 09:54 am
  • அ+ அ-

கரு என்றால் சிறகு என்று அர்த்தம் உண்டு. ட என்பது பறப்பவர் என்று பொருள். அதாவது சிறகுகளைக் கொண்டு பறப்பவர் என்பதால், கருடாழ்வார் என்று பெயர் பெற்றார். இன்று கருட பஞ்சமி நன்னாள். எனவே கருடாழ்வாரை வணங்கி வழிபடுவதற்கு உரிய அற்புதமான நாள்.
வைஷ்ணவத்தில், கருடாழ்வாரை பெரிய திருவடி என்று போற்றுவார்கள். எல்லா பெருமாள் கோயில்களிலும், பெருமாள் சந்நிதிக்கு எதிரே, பெருமாளை தரிசித்தபடியே, கைக்கூப்பி தரிசித்தபடியே நின்றுகொண்டிருக்கும் கருடாழ்வாரைத் தரிசிக்கலாம். 
பறவைகளில் கருடன்தான், ராஜபட்சி. அதாவது பறவைகளின் தலைவன். அப்பேர்ப்பட்ட பறவைகளின் ராஜாவான கருடன், ஆழ்வார் எனும் பெருமைமிகு சொல்லைப் பெற்றுக்கொண்டு, பெரிய திருவடியாக, கருடாழ்வாராக ஆலயங்களில் காட்சி தருகிறார். 
மாதந்தோறும் வருகிற வளர்பிறை பஞ்சமி திதி நாளில், கருடாழ்வாரை வணங்கி வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். அதேபோல், சுவாதி நட்சத்திர நாளில் கருடாழ்வாரை வணங்குவது வளம் சேர்க்கும்.
நாம் வெளியே செல்லும் தருணத்தில், கருடன் வலமிருந்து இடம் சென்றால், எடுத்த காரியம் வெற்றி அடையும் என்பது ஐதீகம். அதேபோல், கருடன் வட்டமிட்டுப் பறந்தால், நலமும் வளமும் நிச்சயம். தேசமும் சுபிட்சம் பெறும்,
சொல்ல முடியாத வேதனை என்று சொல்லுவோமே. அப்படியான வேதனைகளையும் கவலைகளையும் சோகங்களையும் துக்கங்களையும் கருடாழ்வாரிடம் சொல்லுங்கள். உங்கள் வேதனையை நீக்குவார் கருடாழ்வார். கவலைகளைப் போக்குவார். சோகங்களைக் காணடிப்பார். துக்கங்களே இல்லாது செய்வார் கருடாழ்வார்.
இன்று கருட பஞ்சமி நன்னாளில், பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். கருடாழ்வாரை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். கருட பகவானின் பேரருளைப் பெறுங்கள். 
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close