[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 15 Aug, 2018 07:57 am
  • அ+ அ-

மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும்.

ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளைக் குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் தாராளமாகக் கிடைக்கும்.

கடகம்: திடீர் பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பழுதான வாகனம் சீராகும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். மனதில் நிலவிய வீண் பயம் விலகும்.

சிம்மம்: சந்தர்ப்பச் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு சமயோசிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். ஓரளவு பணவரவும் உண்டு. பால்ய நண்பரை எதிர்பாராது சந்தித்து மகிழ்வீர்கள்.

கன்னி: வேலைச்சுமை அதிகரிக்கும். நீண்ட இழுபறிகள் அலைச்சல்களுக்குப் பிறகு காரியங்கள் நிறைவேறும்.. வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி, வயிற்றுக் கோளாறு, அலர்ஜி வரக்கூடும்.

துலாம்: சில விஷயங்களில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. திடீர் பயணம் உண்டு.  செலவுகளும் இருக்கும். வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.

விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலகியிருந்த உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். 

தனுசு: புதிய திட்டங்கள் தடையின்றி நிறைவேறும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவார்கள்.

மகரம்: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அழகு, இளமை கூடும். மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களின் உதவி கிடைக்கும்.

கும்பம்: பழைய பிரச்சினைகள் திடீரென தலைதூக்கும். வீண் பயம், கவலைகள் வந்து நீங்கும். வழக்கில் நிதானம் அவசியம். மின்சார சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

மீனம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. அலைச்சல் குறையும். வாகனம் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close