[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • வி.ராம்ஜி
  • Posted: 14 Aug, 2018 09:22 am
  • அ+ அ-

மேஷம்: திருமணம் கூடிவரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஓரளவு பணவரவும் இருக்கும். பூர்வீகச் சொத்தை சீர்திருத்தம் செய்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

ரிஷபம்: அடிப்படை வசதிகள் பெருகும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும்.  திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள்.

மிதுனம்: பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடிவந்துப் பேசுவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். திடீர் பயணம் ஏற்படலாம்.

கடகம்: தொட்டது துலங்கும். அனுபவப்பூர்வமாகப் பேசுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பழைய கடனைப் பைசல் செய்ய புதுவழி பிறக்கும். பால்ய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கன்னி: நெருங்கியவர்கள் சிலரால் ஏற்பட்ட தர்மசங்கடமான சூழ்நிலையை சாதுர்யமாகச் சமாளித்து விடுவீர்கள். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. கலைபொருட்கள் வாங்குவீர்கள்.

துலாம்: முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றவர்களின் ஆலோசனைகளை பரிசீலித்து கடைபிடிப்பது நல்லது.

விருச்சிகம்: புகழ், கவுரவம் உயரும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். அரசியல் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும்.

தனுசு: கடந்தகால இனிய அனுபவங்கள், சாதனைகளை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்ப்பீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும். திடீர் பயணம் உண்டு.

மகரம்: ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்களால் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள்.

கும்பம்: வரவுக்கு மிஞ்சிய செலவுகள் தொடர்ந்தபடி இருக்கும். சொந்த ஊரில் எதிர்ப்புகள் வரும். முக்கிய விஷயங்களை உங்களது நேரடிப் பார்வையில் முடிப்பது நல்லது.

மீனம்: கணவன் - மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடிவரும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close