[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 13 Aug, 2018 10:50 am
  • அ+ அ-

மேஷம் : வெகுநாட்களாக மனதளவில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

ரிஷபம் : குடும்பத்தில் அனுசரித்துப் போவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம் : ஆடம்பரமான செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி கொடுப்பீர்கள். அண்டை வீட்டாரின் ஆதரவு பெருகும்.

கடகம் : குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றி அடையும்.

சிம்மம் : எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள்.

கன்னி : குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கவேண்டாம். உறவினர்களால் சங்கடங்கள் வரும்.

துலாம் : குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். முகப்பொலிவு கூடும்.

விருச்சிகம் : வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக்காட்டுவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.

தனுசு : குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகளைத் தவிர்ப்பீர்கள்.

மகரம் : இனம் தெரியாத சின்னச்சின்ன கவலைகள் வந்துபோகும். உடன் பிறந்தவர்களால் வீண்செலவும் மனக்கசப்பும் வந்துபோகும்.

சகோதரிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பணம், நகையைக் கவனமாகக் கையாளுங்கள்.

கும்பம் : சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.

மீனம் : கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நட்பு வட்டம் விரியும். தாழ்வு மனப்பான்மை நீங்கி நலம் பெறுவீர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close