[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 08:20 am
  • அ+ அ-

மேஷம்: மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும்.

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் காரியங்களைச் செய்யத் தொடங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் பிள்ளைகளால் மதிப்பு கூடும். மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

மிதுனம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். இழுபறியாக இருந்த பிரச்சினையைத் தீர்க்க வழி பிறக்கும். குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

கடகம்: முக்கிய வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும்.

கன்னி: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த செய்தி வரும்.

துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து நீங்கும். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

தனுசு: வாகனத்தை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். உணவில் காரம், வாயு பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது. சகோதரர் வகையில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மகரம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.

மீனம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு காண்பீர்கள். புண்ணியத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close