[X] Close

’குளிகை’யில் கடனை திருப்பிக்கொடுங்கள்; கடன் மொத்தமும் தீரும்!


jodhidam-arivom-2-54

  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 10:58 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 54:  இதுதான்... இப்படித்தான்! 
ஜோதிடர் ஜெயம் சரவணன்

 

வணக்கம் வாசகர்களே. 
இந்தப் பதிவில் நாம் பார்க்க இருப்பது நால்வர் மற்றும் குளிகை காலம், அது ஏன் நால்வர் மற்றும் குளிகை காலம் என குறிப்பிட வேண்டும்?  ஐவர் காலம் என்றே சொல்லி இருக்கலாமே! அது ஏன் குளிகையை மட்டும் பிரித்து தனியே சொல்ல வேண்டும்?
அதற்குக்  காரணம் உண்டு..! 
நால்வர் காலம்:-  

1) ராகு காலம், 
 2) எமகண்டம் 
3)அர்த்தபிரகணன் 
4)  காலன் காலம்,  இது நான்கும் நால்வர் காலம். 

இவர்களுக்கும் நவக்கிரகங்களுக்கும் என்ன தொடர்பு? 
ராகுகாலம்- ராகுவின் ஆதிக்கம் கொண்ட நேரம்,
எமகண்டம் - எமனின் ஆதிக்கம் உடைய நேரம். இந்த எமன் குரு பகவானின் துணை கிரகம்.
அரத்தபிரகணன்- புதனின் பார்வை பெற்ற ஒரு கோள்.
காலன் காலம்- சூரியனின் எதிர் குணம் கொண்ட சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கோள். 
இதில் ராகுகாலம் எமகண்டம் பெரும்பாலானோருக்கு தெரியும். அப்போது  சுப காரியங்கள் செய்யக்கூடாது, பயணங்கள் கூடாது. புதிய பொருட்கள் வாங்குவது என எந்த விஷயத்தையும் செய்யக்கூடாது என அறிந்திருப்பீர்கள். 

ஆனால் இந்த அர்த்தபிரகணன், காலன் காலம் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அறிந்திராத ஒன்று! 
இதில் அரத்தபிரகணன் என்னும் நேரத்தில் செய்யக்கூடாதவை என்ன என்றால் சுபகாரியங்கள் மட்டுமல்ல, கல்வி சம்பந்தபட்ட எந்தக் காரியமும் தொடங்கக்கூடாது. 
அதாவது முதன்முதலான பள்ளியில் குழந்தைகளின் சேர்க்கை, உயர்கல்வியில் சேருதல், புதிய பயிற்சி வகுப்பில் சேருதல், புதிய மொழி கற்றுக்கொள்ள ஆரம்பித்தல் போன்றவற்றை  ஆரம்பிக்கக்கூடாது,

காலன் காலம்... இதிலும் எந்த சுப காரியங்களும் செய்யக்கூடாது, முக்கியமாக... பயணங்கள் செய்யக்கூடாது, மருத்துவ சிகிச்சை ஆரம்பிக்கக்கூடாது, மருந்துண்ண ஆரம்பிக்கக்கூடாது. 

இந்த நால்வர் காலத்தோடு இணையாமல் தனித்து இருப்பது “குளிகை நேரம்” மட்டுமே. 
இது ஏன் தனித்து இருக்கிறது?  காரணம் இது சுப நேரம் என்பதால்தான்! ஒரேஒரு விஷயத்தை தவிர.... அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.... அது என்னவென்றால், சவ அடக்கம் செய்ய சவத்தை எடுக்கக்கூடாத நேரம்... என்பதுதான்,
ஏன் சவத்தை எடுக்கக்கூடாது? 
குளிகை நேரத்தில் செய்யப்படும் ஒரு காரியம் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும். எனவே சவம் எடுப்பது குளிகை நேரமாக இருந்தால் மீண்டும் மீண்டும் அதே சம்பவம் நடக்கும் என்பதால் குளிகை நேரத்தை தவிர்ப்பார்கள். 
சரி, இதை தவிர வேறு ஏதாவது உண்டா என்றால்? 
இருக்கிறது ...  திருமணம் செய்யக்கூடாது, பெண் பார்ப்பது, மாப்பிள்ளை பார்ப்பது போன்றவைகள் செய்யக்கூடாது,அப்படி செய்தால் மீண்டும் மீண்டும் திருமணம் செய்கின்ற நிலை உண்டாகும். பெண் பார்ப்பது போன்றவை செய்தால்... பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.  எதுவும் கைகூடி வராது. ஏதாவது காரணங்களால் தள்ளிக்கோண்டே போகும்.

சரி... நல்ல விஷயங்கள் உண்டா? உண்டு! 

அது வீடு கிரகப்பிரவேசம் செய்தல், நிலம் வீடு வாங்குதல், பத்திரப் பதிவு செய்தல் போன்றவை செய்யலாம். நிறைய வீடு வாங்குவீர்கள், நிலபுலங்கள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

வேலையில் சேருதலும், பதவி உயர்வு பெற்று பதவி ஏற்கும் போது குளிகை நேரத்தில் பதவி ஏற்றுக்கொண்டால் மீண்டும் மீண்டும் பதவி உயர்வு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

தீராத கடன் தொல்லையா? கடன் தீரவேண்டும், மன அமைதி வேண்டும் என்று தவிப்பவர்கள், உங்கள் கடனில் சிறு பகுதியை ( கவனம்... வட்டி கட்டுதல் அல்ல, கடனில் ஒரு பகுதி) திரும்பிச் செலுத்தினால் விரைவில் கடன் தீரும்,மன நிம்மதி உண்டாகும். 

குழந்தைகள்பெயரில் வங்கியில் டெபாசிட் செய்தல், புது வங்கிக்கணக்கு ஆரம்பித்தல், புதிய தொழில் தொடங்குதல், நிறுவனங்கள் ஆரம்பித்தல், ஆடை ஆபரணங்கள் வாங்குதல், தங்கத்தில் முதலீடு செய்தல், விவசாய அறுவடை செய்தல் போன்றவை தாராளமாகச் செய்யலாம், 
இந்த குளிகன் என்பவர் சனியின் மைந்தன்.  அவருக்கு இருக்கிற அவப்பெயரை நீக்க மகன் குளிகன் நல்ல விஷயங்களை நமக்கு வாரி வழங்குகிறார்.
இந்த குளிகன் தன் தாய் தந்தையோடும், தன் சகோதரன் மாந்தியோடும் கும்பகோணம், நாச்சியார்கோவில் அருகில் உள்ள திருநரையூர் தலத்தில் காட்சி தருகிறார். அவரை வணங்குங்கள், வாழ்க்கையில் மென்மேலும் உயருங்கள்! 
அடுத்த பதிவில் சந்திப்போம். 
- தெளிவோம் 
 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close