[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 08:29 am
  • அ+ அ-

மேஷம்: சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர் களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து மகிழ்ச்சி தரும்.

 

ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கல் ஒன்று தீரும். நிம்மதி அடைவீர்கள்.

 

மிதுனம்: புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகனப் பரா மரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். சேமிப்பில் கவனம் தேவை.

 

கடகம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைக்கட்டி சந்தோஷம் அடைவீர். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

 

சிம்மம்: மனைவி வழியில் மதிப்புக் கூடும். அழகு, இளமைக் கூடும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு உண்டு.

 

கன்னி: பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும்.

 

துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். லேசாக தலை வலிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசியச் செலவுகளைத் தவிர்த்து சேமிப்பை அதிகப்படுத்துங்கள்.

 

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்.

 

தனுசு: உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

 

மகரம்: பிரச்னைகளின் ஆனிவேரை கண்டறிந்து சிக்கலைத் தீர்ப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

 

கும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வர வேண்டிய பணத்தை போராடி பெறுவீர்கள்.

 

மீனம்: சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது நட்பு மலரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். ஆன்மிகத்தல் ஈடுபாடு அதிகரிக்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close