[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 06:35 am
  • அ+ அ-

மேஷம்: உங்களுக்குள் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களை இசை, நடனம் ஆகியவற்றில் பயிற்சி பெற ஊக்குவிப்பீர்கள்.

ரிஷபம்: நீண்டநாளாக எதிர்பார்த்த வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டினரால் ஆதாயம் எல்லாம் நிறைவேறும். பரபரப்புடன் செயல்பட்டு காரியங்களை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டு.

மிதுனம்: மறைமுக எதிரிகளை இனம்கண்டு ஒதுக்குவீர்கள். உங்களின் தன்னடக்கத்தை அனைவரும் பாராட்டுவார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள், அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்: பிரபலங்களின் நட்பைப் பயன்படுத்தி சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள்.  இழுபறியான காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மனைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

சிம்மம்: மனஉளைச்சல், டென்ஷன், சோர்வு, விரக்தி வந்து போகும். அவ்வப்போது தலைகாட்டும் முன்கோபத்தைக் குறையுங்கள். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள்.

கன்னி: யாரையும் யாருக்காகவும் சிபாரிசு செய்யவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம்.. வாகனத்தை எடுக்கும்முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: புதுப் பொலிவுடன் காணப்படுவீர்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பங்கு வர்த்தகம் மூலம் லாபம் வரும். திடீர் பயணம் ஏற்படலாம்.

விருச்சிகம்: விருந்தினர் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் நிலவும். பணவரவு திருப்தி தரும். அரைகுறையாக நின்றுபோன கட்டிட வேலைகளையெல்லாம் விரைந்து முடிப்பீர்கள்.

தனுசு: பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். அவ்வப்போது பழைய இனிமையான நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

மகரம்: காரியங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களை அநாவசியமாக பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

கும்பம்: தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள்.  பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.

மீனம் : அரசு அதிகாரிகளின் துணையுடன் சில வேலைகளை முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் செலவை ஏற்படுத்தினாலும் புதிய அனுபவம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close