[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 09:43 am
  • அ+ அ-

மேஷம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். கடனை தீர்க்கும் வழிகள் குறித்து யோசிப்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

 

ரிஷபம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

 

மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவெடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும்.

 

கடகம்: திட்டமிட்டது ஒன்று, நடப்பது வேறாக இருக்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். எதிர்பாராத செலவு உண்டாகும்.

 

சிம்மம்: எளிதில் முடியக்கூடிய காரியம்கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்து கொள்வார்கள்.

 

கன்னி: உங்களின் புது முயற்சிக்கு பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய கடன் பிரச்சினை தீரும். வெளியூரில் இருந்து நல்ல தகவல் வரும்.

 

துலாம்: மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். அடிக்கடி பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.

 

விருச்சிகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய கடன் பிரச்சினையைத் தீர்க்க வழி பிறக்கும். சகோதரர் வகையில் சுபச்செலவு உண்டு. அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு: வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். வாயுக் கோளாறால் அவதி ஏற்படலாம். எனவே உணவில் கட்டுப்பாடு அவசியம். மனைவிவழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.

 

மகரம்: அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். வீடு வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.

 

கும்பம்: தடைபட்ட காரியங்கள் மளமளவென்று முடியும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

 

மீனம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்களின் முன்கோபம் குறையும். சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close