[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 08:41 am
  • அ+ அ-

மேஷம் : வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தாருடன் ஆலோசிப்பீர்கள். தாய்வழி உறவுகளால் மனக்கசப்புகள் வரக்கூடும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் வரும்.

ரிஷபம் : பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் வரும். தோல்வி பயம் நீங்கும். சகோதரி தக்கசமயத்தில் உதவுவார். பழைய கடனைத் தீர்ப்பதற்கான வழி பிறக்கும். திடீர் பயணம் உண்டு.

மிதுனம் : குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம் : முன்கோபம் அதிகமாகும். கடந்த காலத்தில் கைவிட்டுப்போன நல்ல வாய்ப்புகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். பழைய கசப்பான சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வரும்.

சிம்மம் : நெடுநாள் பழகிய நண்பர் ஒருவரின் நட்பை இழக்க நேரிடும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சின்னச் சின்ன தடைகள் வரக்கூடும்.

கன்னி : குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்களை மளமளவென்று நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள்.

துலாம் : வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

விருச்சிகம் : பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும்.

தனுசு : வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் சக்தியை மீறி யாருக்கும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். எதிர்பாராத கூடுதல் செலவுகளால் திணறுவீர்கள்.

மகரம் : சமயோசித புத்தியால் கடினமான காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். எதார்த்தமாகப் பேசி எல்லோருடைய இதயத்திலும் இடம் பிடிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம் : பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கி வருவார்கள். வாகனம் செலவு வைக்கும்.

மீனம் : முன்கோபம் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பிள்ளைகளின் நலனின் அதிக அக்கறை காட்டுவீர்கள். நெருங்கிய நண்பரை சந்தித்து பேசுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close