[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 03 Jul, 2019 08:41 am
  • அ+ அ-

மேஷம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிரடியாக திட்டங்கள் தீட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

 

ரிஷபம்: முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடல்நலம் சீராகும். விருந்தினர் வருகை உண்டு.

 

மிதுனம்: விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். உதவி செய்வதாக வாக்கு கொடுத்த சிலர் இழுத்தடிப்பார்கள். நண்பர்களின் செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தும். திடீர் பயணம் உண்டு.

 

கடகம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டியது வரும். பழைய கடனைத் தீர்ப்பதற்கான வழிகளை யோசிப்பீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

 

சிம்மம்: தவறு செய்பவர்களைத் துணிவுடன் தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

 

கன்னி: எதிர்பார்ப்புகள் மளமளவென்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

 

துலாம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்தி தரும்.

 

விருச்சிகம்: புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.

 

தனுசு: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் உற்சாகத்தைத் தரும். சகோதரரிடையே ஒற்றுமை பிறக்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

 

மகரம்: உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசி மகிழ்வீர்கள். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். வெளியூர் பயணம் அலைச்சல் தந்தாலும் ஆதாயமும் கிடைக்கும்.

 

கும்பம்: உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள். பணவரவு உண்டு.

 

மீனம்: கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close