[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 02 Jul, 2019 08:57 am
  • அ+ அ-

மேஷம்: அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். அழகு, இளமை கூடும். விலை உயர்ந்த கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள்.

மிதுனம்: புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். திடீர் பயணம் உண்டு.

கடகம்: பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாமல் அன்பால் அரவணைத்துச் செல்லுங்கள். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள். மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் வரும்.

சிம்மம்: பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் மீண்டும் வருவார்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

கன்னி: பழைய உறவினர்கள், நண்பர்களைச் சந்திப்பீர்கள். கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழி பிறக்கும். எதிர்பாராத காரியங்கள் நிறைவேறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

துலாம்: குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். எதிர்பார்த்திருந்த பணம் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வழக்கில் திடீர் திருப்பம் ஏற்படும். வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்: உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். சில வேலைகளை முடிக்க முடியாமல் தடைகள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

தனுசு: சகோதரர்கள் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை நம்பிக்கையைத் தரும்.. ஓரளவு பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.

கும்பம்: புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் உங்களைத் தேடிவரும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

மீனம்: மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கடின உழைப்பின் மூலம் வெற்றியைப் பெறுவீர்கள். கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close