[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 01 Jul, 2019 08:57 am
  • அ+ அ-

மேஷம்: உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல சேதி வரும். புதியவர் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வெளி வட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும்.

ரிஷபம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.

மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளி வட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.

கடகம்: சொந்த முயற்சியால் முன்னேறுவீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். சொந்த பந்தங்கள் கேட்ட உதவியை செய்வீர்கள். எக்காரியத்திலும் நிதானம் தேவை.

சிம்மம்: புகழ், கவுரவம் கூடும். உங்களால் வளர்ச்சி அடைந்த சிலரை இப்போது சந்திப்பீர்கள். முக்கிய நபர்களால் ஆதாயம் கிடைக்கும். பணவரவுடன், சுபச் செலவுகளும் உண்டாகும்.

கன்னி: குடும்பத்தில் மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை கூடும். பணப் புழக்கம் உயரும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும்.

துலாம்: யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கக் கூடாது. நெருங்கியவர்கள் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். அதை பொருட்படுத்த வேண்டாம். பணிச்சுமை அதிகரிக்கும்.

விருச்சிகம்: நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். தடைபட்ட திருமணம் நல்லபடியாக நடக்கும். புதிதாக வாகனம், வீடு, மனை வாங்குவீர்கள்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்த பந்தங்கள் உங்களைத் தேடி வருவார்கள். உங்கள் முடிவுகள் அனைவரும் ஏற்கும்படி இருக்கும்.

மகரம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும். நட்பு வழியில் நல்ல சேதி கேட்பீர்கள். நீண்டநாள் கனவு நிறைவேறும். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். திடீர் பயணத்தால் அலைச்சல், செலவுகள் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.

மீனம்: சகோதர வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close