[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 30 Jun, 2019 09:00 am
  • அ+ அ-

மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். செலவை குறைக்கத் திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்காதீர்கள். குடும்பத்தினர் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சந்தேகத்தால் நல்லவர்களை இழப்பீர்கள்.

மிதுனம்: எதிலும் போராடி வெல்வீர்கள். பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். திடீர் பயணங்கள் ஏற்படக் கூடும்.

கடகம்: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கடன் தொகை வசூலாகும். எதையும் உற்சாகத்துடன் செய்யத் தொடங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.

துலாம்: வேலைச்சுமையால் பதற்றம், சோர்வு அதிகரிக்கும். சிலரின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். யாரையும் முழுமையாக நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

விருச்சிகம்: தன்னம்பிக்கை, தைரியம் பிறக்கும். உங்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு: தொட்ட காரியங்கள் துலங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

கும்பம்: எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். தாயாருடன் எதிர்பாராத மனத்தாங்கல் வரும். கடனைத் தீர்க்கும் வழிகளை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

மீனம்: கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். பழுதான வாகனத்தைச் சீர் செய்வீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close