[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 28 Jun, 2019 08:27 am
  • அ+ அ-

மேஷம் : கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்கிற குழப்பத்துக்கு ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லும் கருத்துகள்கூட சீரியசாக வாய்ப்புள்ளது.

ரிஷபம் : விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்து நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. திடீர் பயணம் உண்டு.

மிதுனம் : வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலைச்சுமை குறையும். பணவரவு உண்டு.

கடகம் : உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பால்ய நண்பர்கள், உறவினர்களைச் சந்திப்பீர்கள்.

சிம்மம் : பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும்.

கன்னி : மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாரையும் மனம்நோகும்படி எடுத்தெறிந்து பேசாதீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம் : சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். நவீன ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள்.

விருச்சிகம் :  குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.

தனுசு  : மனைவிவழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது நல்லது. புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும்.

மகரம் : சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். ஓரளவு பணம் வரும். வாகனத்தை சீர்செய்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

கும்பம் : கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் பண உதவி கிடைக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும். திடீர் பயணம் உண்டு.

மீனம் : எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close