[X] Close

வார ராசி பலன்கள் ஜூன் 27 முதல் ஜூலை 03 வரை (துலாம்  முதல் மீனம் வரை)


27-03

  • kamadenu
  • Posted: 27 Jun, 2019 11:48 am
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூர்யன், புதன், ராகுவுடன் இணைகிறார். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். குடும்பத்தில் கோபமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

அக்கம்பக்கத்தினருடன் சில்லறைச் சண்டைகள் ஏற்படும் சூழ்நிலை வரலாம். அரசியல்வாதிகளுக்கு, வரவேண்டிய பணம் வசூலாகும். பிரச்சினை கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்திருந்த தகவல்கள் வந்துசேரும்.

சிலருக்குத் திருப்புமுனையாக அமையக்கூடிய சில காரியங்கள் நடக்கலாம். பெண்களுக்கு, அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். தெய்வபக்தி அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாகப் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: பச்சை, சிவப்பு.

எண்கள்: 1, 5, 6.

பரிகாரம்: அம்பாளுக்கு முல்லை மலர் அர்ப்பணித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் சஞ்சரிக்கும் வக்கிர குருவால் வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சுணக்க நிலை மாறும். பணவரவு இருக்கும். உத்தியோகரீதியாகப் பயணம் உண்டு. நற்பெயர் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு, சில பெரிய மனிதர்களின் அறிவுரைப்படி நடந்துகொண்டால் காரியங்கள் அனுகூலமாக முடியும். கலைத் துறையினர் யாருக்கும் உத்திரவாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் சில தடைகள் ஏற்படலாம். கவனம் தேவை.

பெண்களுக்கு, நிதானமாகப் பேசுவது நன்மை தரும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மாணவர்களுக்கு, சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. பாடங்கள் எளிமையாகத் தோன்றும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, பச்சை.

எண்கள்: 1, 2, 6.

பரிகாரம்: திருப்புகழ் பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் ராசியின் மீது சூரியன், புதன், ராகு கிரகங்களின் பார்வைபடுகிறது. உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. தந்தைவழி உறவினர்களால் உதவி உண்டு.

அரசியல்வாதிகள் தேவையில்லாமல் வாக்குக் கொடுக்க வேண்டாம். கலைத் துறையினருக்கு, கொடுத்த வேலையைக் கவனத்துடன் செய்வது நல்லது. பிறரின் ஆலோசனைகளுடன் உங்கள் மனத்துக்குச் சரியென பட்டதைச் செய்வது நல்லது.

பெண்களுக்கு, வீண் பேச்சைக் குறைப்பது நல்லது. நட்பு கைகொடுக்கும். எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். மாணவர்களுக்கு, சகமாணவர்களுடன் கவனமாகப் பழக வேண்டும். கல்வியில் அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன்.

திசைகள்: கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: சிவப்பு, நீலம்.

எண்கள்: 5, 6, 7.

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்கக் கடன் பிரச்சினை தீரும். மன நிம்மதி கிடைக்கும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் ராசியின் மீது செவ்வாய் பகவானின் பார்வை இருப்பதால், முக்கியஸ்தர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உற்சாகமாகச் செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள்.

குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் சேருவார்கள். அரசியல்வாதிகள், தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட்டுக் கருத்து சொல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலிடம் சொல்லும் வேலைகளைத் தவிர்க்காமல் செய்வது நல்லது.

கலைத் துறையினருக்கு, வேலைப்பளுவால் உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உண்டு. போதிய உணவு, உறக்கம் அவசியம். பெண்களுக்கு, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மாணவர்களுக்கு, புத்திசாதுரியம் வெளிப்படும். கல்வியில் தொய்வு நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், சனி.

திசைகள்: கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: பச்சை, கருநீலம்.

எண்கள்: 4, 6, 8.

பரிகாரம்: சிவனுக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கக் கஷ்டங்கள் தீரும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் ராசிநாதனின் சஞ்சாரத்தால் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தந்தையின் உதவி உண்டு. அரசியல்வாதிகள், சர்ச்சைக்குரிய விசயங்கள் பற்றிப் பேசி தொந்தரவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டிய கால கட்டம் இது. கலைத் துறையினருக்கு, முக்கிய வாய்ப்புகளில் நல்ல முடிவு கிட்டும்.

மக்களின் நன்மதிப்பைப் பெற்றுப் புகழின் எல்லைக்குச் சென்று மகிழ்ச்சியில் திளைக்கலாம். பெண்களுக்கு, மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். குடும்பத்தில் எல்லா நிலைகளிலும் ஆதரவு இருக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வெள்ளி, சனி.

திசைகள்: தென்மேற்கு, வடமேற்கு.

நிறங்கள்: சிவப்பு, கரும்பச்சை.

எண்கள்: 2, 5, 8.

பரிகாரம்: தினமும் முருகனுக்கு கந்த சஷ்டி கவசம் சொல்லி வணங்க பிரச்சினைகள் குறையும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு பகவான் மீது சுக்கிரனின் பார்வை விழுவதால் எடுத்தக் காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

தலைமையிடமிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி கிடைக்கும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் உழைப்பினால் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ளலாம். பெண்களுக்கு, பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு, கூடுதல் கவனம் செலுத்திப் பாடங்களைப் படிப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி.

திசைகள்: கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு.

எண்கள்: 2, 6, 7.

பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லாக் காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close