[X] Close

வார ராசி பலன்கள் ஜூன் 27 முதல் ஜூலை 03 வரை (மேஷம் முதல் கன்னி வரை)


27-03

  • kamadenu
  • Posted: 27 Jun, 2019 11:42 am
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் சுகஸ்தானத்தில் இருக்கும் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தால் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரம் மந்தமாகக் காணப்பட்டாலும் பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும்.

புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைப்பதற்கான சூழல் உருவாகும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, உங்கள் வாக்குத் திறனால் சாதிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, தேவையான பணம் வந்து சேரும்.

சிலர் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு, திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம். கவனம் தேவை. மாணவர்களுக்கு, உதவுவதில் கவனம் தேவை. பாடங்களைப் படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், சனி.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: கருநீலம், சிவப்பு.

எண்கள்: 3, 5, 6.

பரிகாரம்: நரசிம்மரை வணங்கி வர முன்ஜென்மப் பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியிலேயே இருக்கும் சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிலும் வேகம் காணப்படும். அலுவலகப் பணிகளால் படபடப்பு உண்டாகும். கவனமாகப் பேச வேண்டும். குடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்துக்கான திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள்.

புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நடந்து முடியும். மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்திகள் வரலாம்.

கலைத் துறையினருக்கு, காத்திருந்த வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலமானவர்களுடன் வேலை செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். பெண்களுக்கு, மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு, பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் புரிந்துகொள்வது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி.

திசைகள்: மேற்கு, வடக்கு.

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு.

எண்கள்: 5, 6, 9.

பரிகாரம்: முருகனை வணங்கி வர மனோதைரியம் கூடும். பணக்கஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் சஞ்சரிக்கும் கிரகக் கூட்டணியால் தைரியமாக எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்குள் எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும்.

பிள்ளைகள் குறித்துக் கவலை உண்டாகும். நிதானமாகச் செய்யும் செயல்கள் வெற்றியைத் தரும். அரசியல்வாதிகளுக்கு, தைரியம் அதிகரிக்கும். சில முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். முன்னேற்றத்தில் சிறு தடங்கல்களைச் சந்தித்தாலும் வெற்றியை நோக்கிச் செல்வீர்கள்.

கலைத் துறையினருக்கு, முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். பெண்களுக்கு, எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு, மிகவும் கவனமாகப் பாடங்களைப் படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.

திசைகள்: வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், மஞ்சள்.

எண்கள்: 2, 4, 8.

பரிகாரம்: ஐயப்பனை வணங்கி வர எல்லாப் பிரச்சினைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் சஞ்சரிக்கும் சுகாதிபதி செவ்வாய் சஞ்சாரத்தால் நாட்பட்ட உடல் உபாதைகள் மறையும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். குடும்பத்தினருடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்குள் சுமுக உறவு நிலவ விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும்.

பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, வெளியூர் செல்லும் பணிகள் இருக்கும். கலைத் துறையினருக்கு, வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். சினிமாவில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் வரலாம். பெண்களுக்கு, துணிச்சல் அதிகரிக்கும்.

பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உடைமைகளின் மீது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்.

திசைகள்: கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு.

எண்கள்: 2, 3, 6.

பரிகாரம்: நவக்கிரகத்தில் சூரியனுக்குக் கோதுமையைக் கட்டி நெய் தீபம் ஏற்றி வழிபடச் செல்வம் சேரும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன், ராகு கிரகங்களுடன் இணைந்து இருப்பதால் வீணாக மனத்தை உறுத்திக்கொண்டிருந்த கவலைகள் நீங்கும். குடும்பத்தில் குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்குள் மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தில் இருந்து சில முக்கிய செய்திகள் வந்து சேரும். உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கலைத் துறையினருக்கு, நீண்ட நாள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பு கிடைக்கும்.

இதனால் உங்களை மக்கள் அடையாளம் காணும் வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு, காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு.

எண்கள்: 1, 5, 9.

பரிகாரம்: மஹாலக்ஷ்மிக்குத் தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரியத் தடைகளைப் போக்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதனின் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும்.

குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டு மக்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சில தடங்கல்கள் வந்தாலும் அவற்றை உடைத்துச் சாதிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, நிலுவையிலிருந்த வேலைகள் நல்லபடியாக முடியும். அதுவே மனமகிழ்ச்சியைக் கொடுக்கும்.

பெண்களுக்கு, உதவி கேட்டு வருபவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். திடீர்ச் செலவு உண்டாகலாம். மாணவர்களுக்கு, மற்றவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். கல்வியில் திருப்தி உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.

திசைகள்: வடக்கு, தெற்கு.

நிறங்கள்: கருநீலம், பச்சை.

எண்கள்: 5, 8, 9.

பரிகாரம்: விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வரக் கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close