[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 23 Jun, 2019 08:41 am
  • அ+ அ-

மேஷம்: உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

ரிஷபம்: மன உளைச்சல், சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தந்தை வழி உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. அக்கம்பக்கத்தினரின் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மிதுனம்: திறமையுடன் செயல்பட்டு கடினமான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். மனக்குழப்பம் நீங்கும். வேற்று மதத்தினரால் நன்மை கிட்டும். தந்தையின் உடல்நிலை பாதிக்கப்படலாம்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கி விடாதீர்கள். வாக்குறுதியை போராடி நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்: எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கன்னி: அரசு காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணம் மகிழ்ச்சி தரும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள்.

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்துவந்த தேக்க நிலை மாறும். கலைப்பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம். புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து குடும்பத்தாருடன் கலந்தாலோசிப்பீர்கள்.

தனுசு: வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். முன்பு நீங்கள் செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

மகரம் :  சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்களின் ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளைச் சொல்லி ஆதங்கப்படுவீர்கள். சுபச் செலவு, அலைச்சல் உண்டாகும்.

மீனம்: பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். உடல்நலத்தில் கவனம் தேவை. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close