[X] Close

27 நட்சத்திரங்கள்... தெய்வங்கள்... ஆலயங்கள்!


jodhidam-arivom-2-50

  • kamadenu
  • Posted: 21 Jun, 2019 11:55 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 – 50 : இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

யோகமோ தோஷமோ, நான் உட்பட ஜோதிடர்கள், குறிப்பிட்ட ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து உங்களுக்குப் பரிந்துரை செய்து வருகிறோம். இந்த ஜோதிடம் அறிவோம் பதிவுகளில் கூட நானும் நிறைய கோயில்களை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.

சிவாலயம் என்றால் சிவன்தான் பிரதானம். முருகன் ஆலயம் என்றால் முருகப்பெருமான் பிரதானம். அப்படி இருக்க ஏன் தேர்ந்தெடுத்து கோயில்களை பரிந்துரைக்கிறோம்

உதாரணமாக, வழக்குகளில் வெற்றி பெற காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர், கடன் தீர திருச்சேறை ஶ்ரீரிணவிமோசன ஈஸ்வரன், விதி மாற திருப்பட்டூர் பிரம்மா, நோய் நீங்க வைத்தீஸ்வரன், பதவி உயர்வு பெற தேனி குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான், திருமணத்தடை நீங்க திருமணஞ்சேரி, மரண பயம் போக்கும் ஶ்ரீவாஞ்சியம்...

அமாவசை மற்றும் கிரகணம் அன்று பிறந்தவர்களுக்கு திருக்கடையூர் அபிராமி ஆலயம், செய்வினைக் கோளாறு இருப்பதாக நினைப்பவர்களுக்கு சோட்டானிக்கரை பகவதி ஆலயம், எதிரிகளை வெல்ல காலபைரவர், செல்வம் சேர திருமலை திருப்பதி...

இப்படி பல்வேறு பிரச்சினைகளையும் தீர்க்க பலவாறான தெய்வங்கள் நமக்கு கிடைத்தது நம் பாக்கியம். அவற்றை செவ்வனே தரிசித்து வந்தால், எல்லா நல்லதுகளையும் இறையருளால் எளிதில் அடையலாம்.

ஏன்... ஒரே தெய்வமே நமது பிரச்சினைகளை தீர்க்கலாமே... முடியாதா?

முடியும். நமது மனம் அதை ஏற்பதில்லை. நமக்கு உடனடியாக பிரச்சினை தீரவேண்டும் என்றுதான் நினைப்போமே தவிர, அமர மெதுவாகத் தீர்ந்தால் போதும் என நினைப்பதில்லை. நாம் எதிர்பார்ப்பது இன்ஸ்டன்ட் ரிலீப். உடனடி நிவாரணம்.  

பொறுமையாகவேனும் தீர்ந்தால் போதும் என்று நினைத்தால் ஒரே இறைவனை இடைவிடாது வழிபட நம் தேவைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேறும். நம் பிரச்சினைகள் அனைத்தும் கொஞ்சம்கொஞ்சமாகக் குறையும். நெற்பயிரே 180 நாள் ஒருபோகம் போய் தற்போது 90 நாள் என்றெல்லாம் விளைச்சல் உண்டாக்குகிறோம். காலத்திற்கு தகுந்தாற்போல் நமது இறைவழிபாடும் மாறிக்கொண்டே வருகிறது.

சரி... இப்போது உங்கள் நட்சத்திரத்திற்கு நன்மை செய்யும் தெய்வங்களையும் திருத்தலங்களையும் பார்ப்போம்.

அசுவனி :- திருநள்ளாறு சனீஸ்வரன்,

பரணி :- திருவாலங்காடு காளி

கார்த்திகை :- நாகப்பட்டினம் நாகூர் நாகநாதர் ஆலயம், ஆதிசேஷன்

ரோகிணி :- திருநாகேஸ்வரம் நாகநாதர்

மிருகசீரிடம் :- கதிராமங்கலம் வனதுர்கை

திருவாதிரை :- திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரன்

புனர்பூசம் :- ஆலங்குடி தட்சிணாமூர்த்தி 

பூசம் : ஆலங்குடி தட்சிணாமூர்த்தி  

ஆயில்யம் :- திருப்பரங்குன்றம் (முருகன் கோயில்) சனிபகவான்

மகம் :- சிதம்பரம் தில்லைக்காளி

பூரம் :- திருமணஞ்சேரி ராகு பகவான் 

உத்திரம் :- வஞ்சியம்மன் தாராபுரம் 

ஹஸ்தம் :- திருவாரூர் ராகு, ராஜ துர்கை

சித்திரை :- ராஜ துர்கை,திருவாரூர் சனி

சுவாதி :- திருவானைக்காவல் சனி மற்றும் ராகு (நவக்கிரகம்)

விசாகம் :- சோழவந்தான் திருவேடகம் (நவக்கிரகம்) சனி, ராகு

அனும் :- திருவிடைமருதூர் கோயில் மூகாம்பிகை

கேட்டை :- அங்காள பரமேஸ்வரி பல்லடம்

மூலம் :- ராஜகுரு பகவான், திட்டை

பூராடம் :- திருநாவலூர் பண்ருட்டி தட்சிணாமூர்த்தி 

உத்திராடம் :- துர்கை திருநள்ளாறு

திருவோணம் :- ராஜகாளியம்மன் திண்டுக்கல் தெத்துப்பட்டி

அவிட்டம் :- கொடுமுடி சனிபகவான்

சதயம் :- அர்த்தநாரீஸ்வரர் திருச்செங்கோடு , சனி

பூரட்டாதி :- காஞ்சிபுரம் சித்ரகுப்தர்

உத்திரட்டாதி :- சிதம்பரம் ஓமாம்புலியூர் சனி

ரேவதி :- ஓமாம்புலியூர் சனி

இவை அனைத்தும் நட்சத்திர ஆலயங்கள் மற்றும் தெய்வங்கள் ஆகும். ஒருவர் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த ஆலயங்களுக்குச் சென்று தரிசிப்பது மிகச்சிறப்பைத்தரும்,

வீடு வாகனம் அமைய எந்த தெய்வத்தை வணங்குவது, கடன் தீர என்ன வழி? என்பதையெல்லாம் அடுத்த பதிவில் பார்ப்போம்.

- தெளிவோம்

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close