[X] Close

வார ராசி பலன்கள் ஜூன் 20 முதல் 26 வரை (மேஷம்  முதல் கன்னி வரை)


20-26

  • kamadenu
  • Posted: 20 Jun, 2019 11:29 am
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தால் வீண் செலவுகள் குறையும். பணவரவு அதிகரிக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. தொழிலை விரிவுபடுத்துவதற்கான வேகம் கூடும். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைச்சுமை இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

குடும்பத்தினருடன் கோபப்படாமல் நிதானமாகப் பேச வேண்டும். வீடு, மனை தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். பெண்களுக்கு, நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். கலைத் துறையினருக்கு, அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். அரசியல்வாதிகள் மேலிடத்தில் கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு, கல்விக்குத் தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 2, 3

பரிகாரம்: அம்மனுக்கு இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றி வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் தனவாக்கு குடும்பாதிபதி புதன் சஞ்சாரத்தின் மூலம் பணவரவு இருக்கும். எதிர்பாராத செலவும் வந்து சேரும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும். வியாபாரத்தில் சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். தம்பதிகளுக்குள் சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு, வரவும் செலவும் சரியாக இருக்கும். கலைத் துறையினருக்கு, நன்மைகள் நடக்கும் காலகட்டம் இது.

அரசியல்வாதிகளுக்கு, எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து, தீர்க்கமாக ஆலோசித்து எதிலும் ஈடுபட வேண்டும். வித்யா ஸ்தானாதிபதி சூரியன் தனது பாதசார சஞ்சாரத்தின் மூலம் மாணவர்களுக்கு அனுகூலத்தை வழங்குகிறார்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்

எண்கள்: 2, 6

பரிகாரம்: சுக்கிர ஹோரையில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்கப் பிரச்சினைகள் தீரும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் விரயஸ்தானத்தை குரு பார்ப்பதாலும் மங்களகாரகன் செவ்வாயின் ராசி சஞ்சாரத்தாலும் சுபநிகழ்ச்சிகளில் தொய்வு நீங்கும். மற்றவர்களால் நடக்க வேண்டிய காரியங்கள் நல்லபடியாக நடக்கும். புதிய வீடு, வாகனச் சேர்க்கை உண்டாகும்.

பணவரவு, உற்சாகம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களுக்கு உற்பத்திப் பொருட்களை அனுப்பும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் அலைச்சல், வேலைப்பளு இருக்கும். பெண்களுக்கு, செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும்.

கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு, கல்வி பற்றிய கவலையைத் தவிர்த்துக் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் எண்கள்: 3, 5

பரிகாரம்: அரளிப் பூவை ஆஞ்சநேயருக்குச் சார்த்தி வழிபட எல்லாப் பிரச்சினைகளும் தீரும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் பலமாக சஞ்சரிக்கிறார். மேலும் ராசியில் குரு பார்வை விழுவதால் முயற்சிகள் வெற்றி தரும். அடுத்தவருக்கு உத்திரவாதம் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பங்குதாரர்களிடம் பேசும் போது கவனம் தேவை. உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும்.

குடும்பத்தினரது செய்கைகள் உங்களது கோபத்தைத் தூண்டும்படியாக இருக்கலாம். நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மை தரும் பெண்களுக்கு, மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது.

கலைத் துறையினருக்கு, வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் சிறிய வேலையை முடிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டும். மாணவர்களுக்கு, நட்பு வட்டத்தில் கவனம் தேவை. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை

எண்கள்: 2, 5

பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மனைத் தரிசித்து பஞ்ச முக தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் லாபஸ்தானத்தில் ராகு சாரம் பெற்று சஞ்சரிக்கிறார். மனத்தில் குழப்பங்கள் நீங்கித் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.

குடும்பத்தினரால் அதிகப்படியான வருவாய் இருக்கும். பெற்றோர் உடல் நிலையில் கவனம் தேவை. பெண்களுக்கு, புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு இருக்கும்.

அரசியல்வாதிகளின் திறமை அதிகரிக்கும். கலைத் துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணிதப் பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: தினமும் மாலை வேளையில் சிவனை வணங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் ஆட்சியாக இருப்பதாலும் ஏனைய கிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு அனுகூலம் தரும் வகையில் சஞ்சரிப்பதாலும் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் காலமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்குப் பிறகு கடினமான காரியம் கைகூடும்.

குடும்பத்தில் வீண் பிரச்சினை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் செயல்கள் திருப்தி தரும். பெண்களுக்கு, சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நண்பர்கள் மூலமாகவே இடையூறுகள் ஏற்படலாம்.

கலைத் துறையினருக்கு, நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு, சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் பேசுவது நன்மை தரும். கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 2, 3, 5

பரிகாரம்: துளசியைப் பெருமாளுக்கு அர்ப்பணித்து வணங்க வேண்டும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close