[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 09:03 am
  • அ+ அ-

மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதரர்கள் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு.

ரிஷபம்: விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.

மிதுனம்: குடும்பத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.

கடகம்: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நீண்டநாட்களாகப் பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.

சிம்மம்: கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனஸ்தாபம் நீங்கும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும்.

துலாம்: அடுத்தவர்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள். மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது.

விருச்சிகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள்.

தனுசு: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கும்பம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்துவந்த மோதல் போக்கு நீங்கும். திடீர் பயணம் உண்டு.

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் உங்களைப் புரிந்து கொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close