[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 09:11 am
  • அ+ அ-

மேஷம்: அதிரடியாகத் திட்டங்கள் தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். பணவரவு உண்டு.

ரிஷபம்: முகப்பொலிவு கூடும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கி அன்பு மேலோங்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கடகம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர், நண்பர்களின் சந்திப்பு நிகழும். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு உண்டு.

சிம்மம்: மனக்குழப்பம் விலகி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள்.

கன்னி: சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். எதிலும் நிதானித்துடன் செயல்படுவது நல்லது.

துலாம்: விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது பிரச்சினையைத் தவிர்க்கும்.. திடீர் பயணம் உண்டு..

விருச்சிகம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

 தனுசு: உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சகோதரர் வகையில் நன்மை உண்டு. உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள்.

மகரம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். அடுத்தவர்களை அநாவசியமாக குறை கூறுவதை நிறுத்துங்கள். சாலையைக் கடக்கும்போது கவனம் தேவை.

மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close