[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 08:58 am
  • அ+ அ-

மேஷம்: சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காகச் செலவுகள் செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரும். பணவரவு உண்டு.

ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும்.

மிதுனம்: எந்தப் பிரச்சினையையும் புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.

கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

சிம்மம்: மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். அழகு, இளமை கூடும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

கன்னி: பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தக் கூடும்.

துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தலைவலி, மனச்சோர்வு ஏற்படலாம். பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. அநாவசிய செலவுகளை தவிர்த்து விடுங்கள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீண்டநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை எதிர்பாராமல் சந்திப்பீர்கள்.

தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்பீர்கள்.

மகரம்: பிரச்சினைகளின் ஆனிவேரைக் கண்டறிந்து அதைத் தீர்க்க முற்படுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.

கும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை போராடி பெறுவீர்கள். திடீர் பயணம் உண்டு.

மீனம்: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது நட்பு மலரும். கல்யாண முயற்சிகள் வெற்றி தரும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close