[X] Close

காகம் தலையில் குத்தினால் மரணமா?


  • வி.ராம்ஜி
  • Posted: 09 Jun, 2019 15:00 pm
  • அ+ அ-

-வி.ராம்ஜி

காகம் சனீஸ்வர பகவானின் வாகனம். காகம், முன்னோரின் உருவம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

காகத்துக்கும் நம் அன்றாட வாழ்க்கைக்கும் ரொம்பவே தொடர்பு இருப்பதாகச் சொல்கின்றார்கள் ஆச்சார்யர்கள். நாம் வீட்டில் இருந்து கிளம்பும் போது, காகமானது, வலதுப் பக்கத்தில் இருந்து இடது பக்கம் பறந்து சென்றால், தனலாபம் என்று அர்த்தம். அதேபோல், இடதுப் பக்கத்தில் இருந்து வலது பக்கமாகப் பறந்து சென்றால், பொருள் விரயம் ஏற்படும் என்றும் தெரிவிக்கிறது ஜோதிட சாஸ்திரம்.

காகத்துக்கு தினமும் உணவளிப்பது, நம் பாவங்களைப் போக்கும் என்பது உறுதி. காகமானது தன் குஞ்சுக்கு உணவூட்டுகிற காட்சியைப் பார்த்தால், காரியத்தில் வெற்றி கிடைக்கும்; முன்னோர் ஆசியும் கிடைக்கும் என்கிறார்கள்.

எனவே காகத்துக்கு தினமும் உணவளியுங்கள். மறக்காமல் உணவு வையுங்கள்.

வீட்டில் ஏதேனும் சண்டையோ பூசலோ, கடனோ பணப் பிரச்சினையோ இருந்தால், நிம்மதியே இல்லாத நிலை ஏற்பட்டால், காகத்துக்கு உணவளியுங்கள். குறிப்பாக, எள்ளும் தயிரும் கலந்த சாதத்தை வழங்குங்கள். வீட்டில் சண்டை சமாதானமாகும். பணத்தட்டுப்பாடு நீங்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வீட்டில் நிம்மதி குடிகொள்ளும் என்பது ஐதீகம்.

காகம் தலையில் குத்தினால் என்ன பலன் என்று பலரும் கேட்பார்கள். பலரும் இது பாவம் என்றும் விரைவில் மரணம் நிகழும் ஆயுள் முடியும் என்றெல்லாம் சொல்லி பிபி ஏற்றுகிறார்கள். உண்மையில், காகம் நம் தலையைக் குத்துவதற்கும் மரணத்துக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

குலதெய்வத்தின் அருள் கிடைக்கவும் முன்னோரின் ஆசி கிடைக்கவும் சாதத்தில் எள்ளும் தயிரும் கலந்து வழங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வளம் பெறுவீர்கள் என்பது நிச்சயம்!

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close