[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 08:59 am
  • அ+ அ-

மேஷம்: பழைய வாகனத்தை மாற்றி விட்டு புது வாகனம் வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

ரிஷபம்: சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

மிதுனம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் அடுத்தடுத்து வரும். சகோதரர் வகையில் ஒற்றுமை நிலவும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.

கடகம்: வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

சிம்மம்: அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். உடல்நிலை அவ்வப்போது பாதிக்கக் கூடும். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.

கன்னி: திட்டமிட்டபடி பயணங்கள் வெற்றிகரமாக அமையும். நீண்டகாலமாக விலகியிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். திடீர் பணவரவு உண்டு.

துலாம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: கடந்தகால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டை புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.

தனுசு: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

மகரம்: ஒருவித சலிப்பு, மனச்சோர்வு, தாழ்வுமனப்பான்மை வந்து போகும். யோகா, தியானத்தில் மனதைச் செலுத்துங்கள். அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.

கும்பம்: உங்களின் முன்னேற்றத்துக்கு தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மீனம்: தோற்றப் பொலிவு கூடும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களைக்கூட சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close