[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 08:43 am
  • அ+ அ-

மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வழக்கும் சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். பணவரவு உண்டு.

மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்: உடல் உஷ்ணத்தால் உபாதைகள் ஏற்படலாம். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம். ஊர் பொதுக்காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சிம்மம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் வரும். விலகியிருந்த உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை சாமர்த்தியமாக முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பதால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும்.

விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. பழைய நண்பர்கள், உறவினர்களைச் சந்திப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வேலைக்கான முயற்சியில் தாமதம் ஏற்படும். வாகனம் செலவு வைக்கும்.

மகரம்: சாதுர்யமாகப் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: சமயோசித புத்தியால் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த தொகையைத் திருப்பித் தருவீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

மீனம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close