[X] Close

இன்று சுக்கிர விசேஷம்... யார் யாருக்கு? 


  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 09:18 am
  • அ+ அ-

இந்த நாள் அற்புதமான நாள். சுக்கிர பலம் நிறைந்தநாள். உங்கள் பிறந்ததேதி அல்லது தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கொண்டு இன்றைய சுக்கிர யோகம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை அறியலாம்.

இந்த மாதம் சற்றே விசேஷமானது .

ஆங்கில தேதிப்படி , தேதி , மாதம் , வருடம் இந்த மூன்றையும் கூட்டி வரும் எண்ணிக்கையை ஒற்றைப்படை எண்ணாகக் கூட்டிப் பார்த்தால் ஒற்றை எண் வரும் . இதில் , தேதியின் ஒற்றைக் கூட்டு எண்ணும் இந்த மூன்றின் கூட்டு எண்ணும் ஒரே மாதிரியே வரும் மாதம் இது  என்கிறார் ஜோதிடர் தஞ்சை ராஜா ஞானசேகர்.

மேலும் அவர் விளக்குகிறார்...

அதாவது ... இன்று ...

06.06.2019
6 + 6 + 3 = 15 = 6
ஆக ... இன்றைய நாள் மற்றும் மொத்தக் கூட்டு எண் இவை இரண்டுமே 6 என்றுதான் வருகின்றன. அதாவது , இன்றைய நாளின் சுருக்கம் ( 6 - 6 ) என்பதாகும்.

இப்படி இரண்டும் ஒரே எண்ணாக வருடத்தில் ஒரு சில மாதங்களில் மட்டுமே வரும். அப்படி வரும் மாதங்களில் இந்த மாதமும் உண்டு. இதுபோல் ஒரே இலக்கக் கூட்டு எண்ணாக இந்த வருடத்தில் , இந்த மாதம் மட்டுமே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

 சரி அதனால் என்ன  என்கிறீர்களா?

இந்த எண்கள் எல்லாமே கிரகங்களைக் குறிப்பதால், இப்படி இரண்டு விளக்கமும் ஒரே மாதிரியாக வரும் எண்களின் கிரகங்களும், அந்த நாட்களில் விசேஷ பலன்களைப் பெறுகின்றன .

உதாரணமாக , இன்றைய எண்  6 - 6.

சுக்கிரன் ஆதிக்கம் மிகுந்த நாள் இன்று . இன்றைய நாளில் பிறப்பவர்கள் சுக்கிரனின் சுகபோகங்களை அதிகம் அனுபவிப்பார்கள். அதேபோல், யாருடைய பிறந்த நாளில் தேதி அல்லது முழுக்கவும் கூட்டும் போது 6 என்ற எண்ணிக்கை வருகிறதோ , அவர்களுக்கெல்லாம் இன்று ஒரு விசேஷமான நாள் என்றே சொல்லலாம்.

அவர்களுக்கு இன்று சந்தோஷம் தரும் கேளிக்கைச் சம்பவங்கள், நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பாராத வகையில் பெண்களால் அல்லது இருபாலராலும்  மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு நிறைய ஆர்டர்கள் கிடைக்கும் .

கலைத்துறை சார்ந்தவர்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் மற்றும் வாய்ப்புகள் கிடைக்க அவகாசம் உண்டு . திடீர் என்று கிளம்பி,  சினிமா , பார்க் , பீச் , ஹோட்டல் என்று இந்த நாள் களை கட்டப்போகிறது. பிடித்தமான நட்பு , விருந்தினர்கள் வருகைக்கும் வாய்ப்புகள் உள்ளன.  
வீடு  கட்டுவதில், வண்டி வாகனங்கள் வாங்குவதில் நல்ல முன்னேற்றம் உண்டு . முக்கியமாக இன்று பிற்பகலுக்குப் பிறகு மிகச் சிறப்பான யோகங்கள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

அதிகம் அலைச்சலிலும், கடும் வெயிலிலும் , வியர்க்க வியர்க்க ஓடியாடி வேலை செய்வதிலும் விருப்பம் இல்லாத இந்த 6ம் தேதியில் பிறந்த எண்காரர்களுக்கும் 6 கூட்டுத்தொகை வரும் அன்பர்களுக்கு இன்று உண்மையில் யோகமான நாள்தான் .

இந்த எண்களின் விவரணை என்பது நீண்ட நெடிய ஆய்வுக்குட்பட்டது . அன்றைய நாளின் கிரக நிலை, ஒருவரது ஜனன ஜாதக கிரக நிலை இவற்றைப் பொருத்து இந்தப் பலன்கள் ஒருவருக்கு எவ்வளவு கிடைக்கிறது என்பதும் , அது நேர்மறையாகக் கிடைக்கிறதா அல்லது எதிர்மறையாக என்ஜாய் பண்ண வைக்கிறதா என்பதும் தீர்மானிக்கப்படுகிறது  என்று தெரிவித்துள்ளார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close