[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 09:01 am
  • அ+ அ-

மேஷம்: நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடித்து காட்டுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள்.

ரிஷபம்: மனசாட்சிபடி செயல்படுவீர்கள்.  கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

மிதுனம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். முக்கியப் பிரச்சினை ஒன்றில் தீர்வு கிடைக்கும்.

கடகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். திட்டமிடாதச் செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கல்யாண முயற்சி பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.

கன்னி: உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைப்பீர்கள். நெருங்கியவர்களைச் சந்தித்து எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

துலாம்: கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். தடைபட்ட வேலை முடியும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள்.

விருச்சிகம்: பொறுமையுடன் இருந்து காரியங்களை முடிக்க முயலுங்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள். 

தனுசு: பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். புதுப்பொருள் சேரும். வீட்டை விரிவுபடுத்தி கட்டத் திட்டமிடுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

மகரம்: வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

கும்பம்: உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். விருந்தினர் வருகை உண்டு.

மீனம்: பழைய கடனைத் தீர்க்கும் வழிகளை யோசிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். கலைப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close