[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 08:45 am
  • அ+ அ-

மேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி, ஒற்றுமை உண்டாகும்.

ரிஷபம்: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

மிதுனம்: தாயாருடன் எதிர்பாராத வகையில் மனத்தாங்கல் வரும். சாலையைக் கடக்கும் போது கவனம் தேவை. மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். திடீர் பயணம் உண்டு.

கடகம்: சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த தொகை தாமதமாக வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வாயு பதார்த்தங்களை தவிர்த்து விடுங்கள்.

சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். வீடு கட்ட வரைபட அனுமதி கிடைக்கும். கலைப் பொருட்கள் சேரும்.

கன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்து காட்டுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: தந்தைவழி உறவினர்களால் உதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள், சுபகாரியங்களை தலைமை தாங்கி நடத்துவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

விருச்சிகம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் கருத்துமோதல்களும், பிரச்சினைகளும் வரக்கூடும். திடீர் பயணம் உண்டு.

தனுசு: மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள்.

மகரம்: மனைவிவழி உறவினர்களால் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

கும்பம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். அவர்களால் சில காரியங்களை சாதிப்பீர்கள் தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும்.

மீனம்: ஆன்மிக ஆற்றல் கிட்டும். எதிர்காலத்தை கணிக்கும் சக்தி ஓரளவு கிடைக்கப் பெறுவீர்கள். மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் மதிப்பார்கள். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close