[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 04 Jun, 2019 09:52 am
  • அ+ அ-

மேஷம்: பொதுக்காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். பணவரவு உண்டு.

ரிஷபம்: அலைச்சல், டென்ஷன் இருக்கும். ஆங்காங்கே பகை உணர்வு உண்டாகும். உங்களின் முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க நேரிடும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

மிதுனம்: குடும்பத்தில் சின்னச் சின்ன விவாதங்கள் வரும். சகோதரர்களால் டென்ஷன், ஏமாற்றம் வந்து செல்லும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். முகப்பொலிவுடன் காணப்படுவீர்கள். தாமதமான சில காரியங்கள் இன்று திடீரென முடியும்.

சிம்மம்: சோம்பல், களைப்பு நீங்கி சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி: எதிலும் வெற்றி, மகிழ்ச்சி உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். சேமிக்கவும் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

துலாம்: பிள்ளைகளுக்கு அலைச்சலும், உடல்நலக் குறைவும் ஏற்படக்கூடும். திடீர் பயணங்களும், செலவுகளும் வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். காரியங்களில் நிதானம் அவசியம். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

தனுசு: நினைத்த காரியங்களெல்லாம் சுலபமாக நிறைவேறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்: நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வெள்ளி ஆபரணம் வாங்குவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு வாங்குவது, விற்பது நீங்கள் எதிர்பார்த்த விலைக்கு முடியும்.

கும்பம்: விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள்.

மீனம்: நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close