[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 09:13 am
  • அ+ அ-

மேஷம்: தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல சேதி வரும். புதியவர் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வெளி வட்டாரத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.

மிதுனம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளி வட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிர்மறை எண் ணங்கள் தோன்றும். ஆன்மிக நாட்டம் கூடும்.

கடகம்: சொந்த முயற்சியால் முன்னேறுவீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். சொந்த பந்தங்கள் கேட்ட உதவியை தட்டாமல் செய்வீர்கள். பண வரவு உயரும்.

சிம்மம்: புகழ், கவுரவம் கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும். முக்கியஸ்தர்களால் ஆதாயம் கிடைக்கும். சுப செலவுகள் வரும்.

கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடும்.

துலாம்: யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்துவார்கள். அலைச்சல், அசதி, வேலைச் சுமை அதிகரிக்கும்.

விருச்சிகம்: தொழில், வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். தடைபட்ட திருமணம் கைகூடி வரும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்த பந்தங்கள் உங்களைத் தேடி வருவார்கள். சாதுர்யமாகப் பேசி அனைவரையும் கவர்வீர்கள்.

மகரம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் வெளிப்படும். நட்பு வழியில் நல்ல சேதி வரும். உங்கள் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பயணத்தால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.

மீனம்: சகோதர வகையில் ஆதாயம், லாபம் உண்டு. இழுபறியாக இருந்த பூர்வீக சொத்து பிரச்சினை சுமுகமாகத் தீரும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close