[X] Close

தொழிலில் வெற்றி வேண்டுமா?


jodhidam-arivom-2-44

  • kamadenu
  • Posted: 02 Jun, 2019 16:11 pm
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 44 : இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

 நாம் இப்போது பார்க்க இருப்பது அகண்ட சாம்ராஜ்ஜிய யோகம். அப்படி என்றால் இந்த உலகையே கட்டி ஆள்பவன் என்று பொருள்.

நேரடி அரசர்கள் ஆட்சி, முடிவுக்கு வந்து மக்களாட்சி முறை வந்த பிறகு, எப்படி சாம்ராஜ்ஜியம் இருக்க முடியும்? 

இன்னும் ஒருசில நாடுகளில் அரச குடும்பங்கள் ஆட்சி அதிகாரங்களில் தலையிடாமல் கௌரவத்திற்காகவும், மரியாதை நிமித்தமாகவும்தான் பதவியில் இருக்கிறார்கள். 

சரி , அப்படியானால் சாம்ராஜ்ஜியம் எப்படி உண்டாகும்? ஆட்சி அதிகாரம் மட்டுமே அரச வாழ்வு கிடையாது. 

மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியமும் அரசனுக்கு நிகரானதுதான்.  

உலகம் முழுக்க கிளை பரப்பி, தன் வியாபாரத்தை பரவலாக பரவச்செய்து, வலுவாகத் காலூன்றினால்....!  அகண்ட சாம்ராஜ்ஜிய யோகம் இருப்பவர்களால்தான் முடியும்.

பில்கேட்ஸ் முதல் கோக், மெக்டொனால்ட், இரும்புத்தொழில் லட்சுமிமிட்டல், இந்தியாவில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி, டாடா, அம்பானி  முதலானவர்கள் இந்த யோகத்தை உடையவர்களே!

எப்படி இருக்கும் இவர்கள் ஜாதகம்? நமக்கும் இது மாதிரியான யோகம் இருக்குமா? பார்க்கலாம்.

ஒருவர் ஜாதகத்தில் லக்னம் எதுவானாலும் 10 ம் இடம் என்னும் தொழில் ஸ்தானம் மற்றும் அதன் அதிபதி பலமாக இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் 10ம் அதிபதி உச்சம் எனும் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருக்க வேண்டும். 

சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் இருக்க வேண்டும் அல்லது தொழில் ஸ்தானத்தைப் பார்க்க வேண்டும். 

அதேபோல சூரிய பகவான் ஆட்சி அல்லது உச்சம் என்ற நிலையில் இருக்க வேண்டும். 9 மற்றும் 10 அதிபதிகள் தொடர்பில் இருக்க வேண்டும். 

மேலே சொன்ன அமைப்புக்கு விளக்கம்:- 10 அதிபதி உச்சம் பெற தொழில் வளர்ச்சி உச்ச நிலையை அடையும்.

சனி கர்ம காரகன் மற்றும் ஜீவன காரகன். மேலும் தொழிலாளர்கள் என்பதையும் குறிக்கும். இவர் நல்ல நிலையில் இருந்து, தொழில் ஸ்தானத்தையும் பார்த்தால், உண்மையான, நேர்மையான, வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் என்ற லட்சியம் கொண்ட உழைப்பாளர்கள் அமைவார்கள். 

இவை அனைத்தும் அமைந்தால் தொழில் வளர்ச்சி முன்னேற்றம் உண்டாகும். ஆனால்... அழியாப்புகழை அந்த நிறுவனம் பெறவும் உலகமே திரும்பிப் பார்க்க வைக்கவும் புகழ் வெளிச்சம் என்னும் சூரியன் பகவானால்தான் முடியும், அதற்காகத்தான் சூரிய பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

மேலும் 9-10 அதிபதிகள் தொடர்பு பெற வேண்டும் என்று சொன்னேன் அல்லவா... அது எதற்கு? 

எந்தத் தொழில் செய்தாலும் பணம் ஈட்டுதல் என்பது முக்கியமல்ல. அப்படி ஈட்டுகிற பணம் நேர்மையானதாகவும், எவர் மனதையும் காயப்படுத்தாமல் வருவதாகவும் இருக்க வேண்டும். அதற்கு இந்த 9-10 அதிபதிகள் தர்மகர்மாதிபதியாக செயல்பட்டு நேர்மையான வழியில் சம்பாதிப்பதை உறுதி செய்வார்கள். இப்படிப்பட்ட ஜாதகர்களே சாதனைக்குரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவி சாதனை செய்ய முடியும்.

இது இன்போசிஸ் நிறுவனர் திரு. நாரயணமூர்த்தி் அவர்களின் ஜாதகம்... 

இவர் ஜாதகத்தில் நாம் மேலே சொன்ன அத்தனை அம்சங்களும் இருக்கின்றன. மேலோட்டமான முதல் பார்வையில் காலசர்ப்ப தோஷ ஜாதகம் போல தோன்றினாலும் சந்திரன் 5 டிகிரியிலும் ராகு 28 டிகிரியிலும் இருப்பதால் இது காலசர்ப்ப தோஷத்தில் வராது, இவர் துலா லக்னம், ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம், பத்தாம் ஸ்தானத்தில் சனி+புதன், பத்தாம் அதிபதி சந்திரன் ரிசபத்தில் உச்சம் அதுவும் பரம உச்சம்( சந்திரன் ரிசபத்தில் முதல் 10 டிகிரியில் பரம உச்சம்) கூடவே ராகு, 9 ம் அதிபதி புதன் பத்தாம் இடத்தில், லாப ஸ்தானம் என்னும் 11 ம் இடம் சிம்மம். அந்த சிம்மத்தில் சூரியன் ஆட்சி பலம், இப்போது ஜாதக பலன் என்ன என பார்ப்போம்.....

தொழில் ஸ்தானத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும். அந்த இடத்தில் சனி பகவான், இவர் துலா லக்னத்திற்கு யோகாதிபதி. இவர் தொழில் ஸ்தானத்தை அசைக்க முடியாத பலத்தையும் நல்ல யோகத்தையும் வாரி வழங்குகிறார்,

தொழில் ஸ்தான அதிபதி சந்திரன் உச்சம் பெற்றது நன்மை. சந்திரன் வேகமான கிரகம் எனவே தொழிலும் வேகமான வளர்ச்சி கண்டது. அந்த வளர்ச்சி அசுரத்தனமாய் வளர ராகு பெரும் உதவி செய்தார். லாப ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி பலமாக இருந்ததால் லாபம் கொட்டியது மட்டுமல்லாமல், அசைக்க முடியாத அளவுக்கு இருக்கிறது.

9ம் அதிபதி புதன் பத்தில் அமர்ந்ததால் தர்மகர்மாதிபதியாகி நேர்மையான வருவாய் தந்தது.

எல்லாம் சரிதான். “லக்னம் துலாம்,அதன் அதிபதி சுக்ரன் கன்னியில் அமர்ந்து நீசம் என்கிற நிலை அடைந்திருப்பதால், லக்னாதிபதியான நாராயணமூர்த்தி அவர்கள் தோற்றுப்போக வாய்ப்பிருக்குதானே” என கேட்கலாம்.

நான் பல முறை, பல பதிவுகளில் விளக்கியிருக்கிறேன். சுக்ரனுக்கு நீசம் என்ற அந்தஸ்து இல்லை.. இல்லை ... இல்லவே இல்லை! 

சூரியனுக்கும் சனிபகவானுக்கும் 8 ல் மறைவு இல்லை. மாறாக ஆயுள் பலம் கூடும்.

புதனுக்கு 6ல் மறைவு இல்லை. 6ல் புதன் உயர்ந்த கல்வி தருவார்.

3ல் செவ்வாய்க்கு மறைவு இல்லை. மாறாக நிறைய உத்வேகத்தையும், தைரியத்தையும், தளராத நம்பிக்கையும் தருவார்,

அது சரிங்க, இந்த யோகம் எனக்கு இருக்கு என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் நான் இன்னும் கஷ்டப்பட்டுக்கிட்டும், என்ன பண்றதுன்னே தெரியாம முழிச்சிகிட்டு இருக்கேன்” என்பவர்களுக்கு.....

நீங்கள் விளக்கின் முனையில் எரிந்து கொண்டிருக்கும் தீபம் போல... அதன் வெளிச்சம் குறைவாக.. எந்தப் பலனும் இல்லாமல், வீணாக எரிந்து கொண்டிருப்பது போல் இருக்கிறீர்கள்.

அந்த தீபத்தின் திரியை தூண்டிவிட்டால் போதும் ... வெளிச்சம் பிரகாசமாக மாறும். தீபம் பலருக்கும் தெரியும், வெளிச்சம் பலருக்கும் உதவும்.

ஆம் உங்கள் திறமையை ஜோதிடம் வெளிச்சம் போட்டுக் காட்டும். உங்களுக்கான வழிகாட்டுதல் தெரியும். உங்களை உங்களுக்கே அறிய வைக்கும்.

சென்னையின் மிகப்பிரபலமான புகழ் பெற்ற திரையரங்கத்தில் சாதாரண வேலை செய்த இளைஞன் ஒருவன் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தார். அவர் ஜாதகத்தைப் பார்த்தவுடன் எனக்குத் தெரிந்தது இதுதான். அந்தப் பையன் ஒரு தொழிலதிபராக வாழவேண்டியவன், இங்கே தியேட்டரில் டிக்கெட் கிழித்துக்கொண்டு தன்னை முடக்கிக்கொண்டு இருக்கிறான். அந்தப் பையனிடம் நான் சொன்ன ஒற்றைவரி பலன்...

“முதலில் இந்த வேலையை விடு. ஒரு கார் வாங்கி டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கு.மற்றதெல்லாம் முருகன் பார்த்துக் கொள்வான்.. என்பதே!  

நம்புங்கள் இப்போது பல வாகனங்களை வைத்து வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறான்.  

இப்போது உங்கள் ஜாதகத்தை நல்ல ஜோதிடரிடம் காட்டி உங்களுக்கான யோகம் எது... என அறிந்து வாழ்வில் வெற்றிகரமான மனிதராக பரிணமியுங்கள்!

அடுத்த பதிவில் பார்ப்போம்.

- தெளிவோம்

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close