[X] Close

முல்லா கதைகள்: ஆபத்து ஆள் பார்த்து வருவதில்லை


  • kamadenu
  • Posted: 30 May, 2019 10:52 am
  • அ+ அ-

-கனி

ஒரு பெண், முல்லா சொல்லிக்கொடுக்கும் பள்ளிக்குத் தன் மகனை அழைத்துவந்தார்.

‘இவன் மிக மோசமாக நடந்துகொள்கிறான். இவனை நீங்கள் மிரட்ட வேண்டும்’ என்று கேட்டுகொண்டார்.

முல்லா, கண்கள் சிவக்க, கடுமையான முகபாவத்துடன்  அச்சறுத்தும் தோரணையில் நின்றார். திடீரென்று, அவர் மேலும் கீழும் குதித்துவிட்டு கட்டிடத்தைவிட்டு ஓடினார்.

அந்தப் பெண் மயங்கி விழுங்கிவிட்டார். மயக்கம் தெளிந்து, முல்லா வருவதற்காக அவர் காத்திருந்தார். முல்லா மெதுவாக மோசமான நிலையில் திரும்பிவந்தார்.

‘நான் சிறுவனைத்தான் அச்சுறுத்த சொன்னேன். என்னை அல்ல!’

‘அம்மா, என்னைப் பார்த்து நானே பயந்துவிட்டேன். ஆபத்து அச்சுறுத்தும்போது, அது எல்லாரையும் ஒரே மாதிரிதான் அச்சுறுத்தும்.’

பாலைவன சாகசங்கள்

‘நான் பாலைவனத்துக்குச் சென்றிருந்தபோது ஒருநாள், பயங்கரமான, ரத்தவெறி பிடித்த கூட்டத்தினரை ஓடவிட்டிருக்கிறேன்’ என்றார் முல்லா.

‘ஆனால், எப்படிச் செய்தீர்கள்?’

‘ரொம்ப சுலபம். நான் ஓடினேன். அவர்கள் என்னைப் பிடிப்பதற்காக என் பின்னால் ஓடிவந்தார்கள்.’ 

திருடர்கள்

யாரோ தன் வீட்டுக்குள் உலவிக்கொண்டிருப்பதை உணர்ந்த முல்லா, பயந்துபோய் அலமாரிக்குள் மறைந்துகொண்டார்.

அவர் வீட்டில் இருந்த இரண்டு திருடர்கள், பொருட்களைத் தேடும்போது அலமாரிக்குள் ஒளிந்திருக்கும் முல்லாவைக் கண்டனர்.

‘ஏன்  ஒளிந்துகொண்டாய்?’ என்று அவர்களில் ஒருவர் கேட்டார்.

‘நீங்கள் இந்த வீட்டிலிருந்து எடுத்துச்செல்லும் அளவுக்கு எந்தப் பொருளுமே இல்லை என்ற அவமானத்தால் ஒளிந்துகொண்டேன்’ என்றார் முல்லா.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close