[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 30 May, 2019 09:25 am
  • அ+ அ-

மேஷம்: குடும்பத்துடன் ஆன்மிகப் பயணங்கள் சென்று வருவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கலைப்பொருட்கள் சேரும்.

ரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தினர் எல்லோரும் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பணவரவு உண்டு.

மிதுனம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். தடைபட்ட வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். திடீர் பயணம் உண்டு.

கடகம்: புதிதாக வாகனம், நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் உயரும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரும்.

சிம்மம்: குடும்பத்தினருடன் அவ்வப்போது சண்டை, சச்சரவுகள், எதிலும் பிடிப்பற்ற போக்கு, தர்மசங்கடமான சூழல்கள் ஏற்படும். அநாவசியச் செலவுகளால் சேமிப்பு கரையும்.

கன்னி: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.

துலாம்: எதிர்ப்புகள் அடங்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். புது வாகனம் வாங்குவீர்கள்.

தனுசு: உங்களின் புத்திசாலித்தனம், சாதுர்யம் வெளிப்படும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களைக் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்.

மகரம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். திடீர் பயணம் ஏற்படக்கூடும்.

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நவீன ரக மின்சாதனங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். திருமண காரியங்கள் கைகூடி வரும்.

மீனம்: ஒருவித படபடப்பு, பயம், எதையோ இழந்ததைப் போன்ற வெறுமை வந்து செல்லும். எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close