[X] Close

ஜோதிடம் அறிவோம் 2 - 43: இதுதான்... இப்படித்தான்!


jothidam

  • kamadenu
  • Posted: 28 May, 2019 15:19 pm
  • அ+ அ-

உங்கள் குலதெய்வம்... உங்கள் ஜாதகத்தில்! 

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே. 
இந்தப் பதிவில் நாம் பார்க்க இருப்பது "பூர்வ புண்ணிய ஸ்தானம்" என்னும் "புத்திர ஸ்தானம்" என்னும் "குலதெய்வம்" அறியும் ஸ்தானம் பற்றியது. 

குலதெய்வ வழிபாடு சரியாக இருந்தால்தான் புண்ணியம் சேரும். புண்ணியம் சேர்ந்தால்தான் புத்திரம் எனும் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

இந்த பூர்வ புண்ணியம் எவ்வாறு கணக்கிடபடுகிறது?.
உங்கள் முன்னோர்கள் செய்த புண்ணியம், நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த புண்ணியம் என அனைத்தும் இங்கே கணக்கிடப்படும். 

அப்படியானால் இந்தப் பிறவியில் செய்த புண்ணியம் என்னாகும்? என்றுதானே கேட்கிறீர்கள். 
நிச்சயமாக உங்களுக்குச் சேராது. உங்கள் வாரிசுகளுக்கும், உங்களின் அடுத்த பிறவிக்கும்தான் இந்த ஜென்மத்துப் புண்ணியங்கள் போய்ச்சேரும். எனவே முடிந்த அளவு தர்ம காரியங்களும், பிரதிபலன் பாராத உதவிகளும் செய்யுங்கள்.  இரக்க குணத்தோடும், வன்மம் இல்லாத மனதோடும் வாழுங்கள். இறைவன் உங்கள் தேவைகளை நீங்கள் கேட்காமலேயே உங்களுக்குத் தந்தருள்வார். 

சரி இப்போது குலதெய்வத்தை எப்படி அறிவது? இப்போது வணங்கி வரும் குலதெய்வம்தான் நம்முடைய குலதெய்வமா? சரியாகத்தான் வணங்கி வருகிறோமா? எனக்கு குலதெய்வம் எது என்றே தெரியவில்லை. எப்படி அறிவது? 
... இதுபோன்ற கேள்விகள் ஏராளம். அவற்றுக்கு விடை தேடுவோமா? 
உங்கள் ஜாதகத்தில் 5ம் இடம் என்பதுதான் பூர்வ புண்ணிய ஸ்தானம். இந்த 5ம் இடமே குலதெய்வம் எது என்று நமக்குக் காட்டும். உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து தொடங்கி எண்ணிக்கொண்டே வந்தால் 5ம் இடம் எந்த ராசி என்று பாருங்கள். அந்த வீட்டின் அதிபதி எந்த கிரகமோ அதுவே தெய்வத்தை குறிக்கும். 

உதாரணமாக 5ம் இடம் மேஷம் என்றால் முருகன்தான் உங்களுக்குக் குலதெய்வம். மேலும் ஐயனார், மதுரை வீரன்,சுடலைமாடன், வீரனார், போன்ற தெய்வங்களையும் குறிப்பிடும்.

5ம் இடம் ரிஷபம் என்றால், துர்கை, காளி, சாமுண்டி, போன்ற சக்தி தெய்வங்கள். அதாவது பெண் தெய்வங்கள். 

மிதுனமாக இருந்தால், விஷ்ணு, நடராஜர், ஐயப்பன், ஐயனார்.

கடகம் என்றால், விஷ்ணு துர்கை, சக்தி வடிவான அம்பாள்.

சிம்மம் என்றால், சுயம்புலிங்கம், நடுகல் வழிபாடு, அக்னி,அண்ணாமலையார்.

கன்னி என்றால் -: மகாலக்ஷ்மி, மீனாட்சி, பச்சையம்மன், பாஞ்சாலியம்மன். 

துலாம் 5ம் இடம் என்றால் - பெருமாள், வைணவ தெய்வங்கள். 

விருச்சிகம் - காளி, துர்தேவதைகள், பலி கேட்கும் பெண் தெய்வங்கள்.

தனுசு - மகான்கள், ஞானிகள், சித்தர்கள். 

மகரம் - ஐயப்ப சுவாமி, அரிச்சந்திரன், கூத்தாண்டவர்.

கும்பம்-: எமதர்மன், மகிஷாசுரமர்த்தினி, பித்ருக்கள், முன்னோர் வழிபாடு.

மீனம் - மகான்கள்,குருமார்கள், ரங்கநாதர், மீனாட்சி.

இவையனைத்தும் பொதுவான தெய்வங்கள். உங்கள் ஜாதகத்தில் அந்த கிரகம் அமர்ந்த வீடு, நட்சத்திரம், மற்றும் சேர்ந்த கிரகம் கொண்டே குலதெய்வம் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை மறக்காதீர்கள். 

அடுத்த பதிவில் சந்திப்போம்.
- தெளிவோம்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close