[X] Close

இந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 23 முதல் மே 29 வரை (மேஷம் முதல் கன்னி வரை)


23-29

  • kamadenu
  • Posted: 23 May, 2019 08:57 am
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் பல வகையிலும் நற்பலன்களைத் தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலைச் சந்திக்க வேண்டி இருக்கலாம். உத்தியோகத்தில், கூடுதல் பணிச்சுமை இருக்கும். முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு, தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, துணிச்சல் அதிகரிக்கும். பயணங்கள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் இருக்கும். மாணவர்களுக்கு, கல்விச் செலவு உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.

திசைகள்: கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு, மஞ்சள்.

எண்கள்: 2, 3, 9.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனை வணங்கிவரக் காரியத் தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் காரியங்களில் தடை நீங்கும். மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். தொழில், வியாபாரச் சிக்கல்கள் நீங்கும். வியாபார விரிவாக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்குப் புதிய பதவி, பொறுப்புகள் கிடைக்கலாம். பெண்களுக்கு, திறமையான பேச்சு பலன்தரும். கலைத் துறையினருக்கு, கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

 அரசியல்வாதிகள் கோபமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்களிடம் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.

திசைகள்: மேற்கு, தென்மேற்கு. 

நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்.

எண்கள்: 2, 6.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு மொச்சை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய மகிழ்ச்சி ஏற்படும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதனின் சஞ்சாரத்தால் தேவையான உதவிகள் கிடைக்கும். நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கவனம் செலுத்துவது நல்லது.

தொழில், வியாபாரத்தில் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்தக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலதிகாரிகள், சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும்.

பெண்களுக்கு, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்களுக்கான முயற்சிகள் பலன் தரும். அரசியல்வாதிகளுக்கு, தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு, கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்.

 திசைகள்: மேற்கு, வடக்கு.

நிறங்கள்: பச்சை, மஞ்சள்.

எண்கள்: 2, 5.

பரிகாரம்: புதன், சனிக்கிழமைகளில் பெருமாளைத் தரிசித்து அர்ச்சனை செய்ய நலன் உண்டாகும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியைப் பார்க்கும் குருவால் எதிர்ப்புகள் விலகும். பணவரவு அதிகரிக்கும். புத்தி சாதுரியம் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி நீடிக்கும்.

பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். உத்தியோகத்தில், திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பெண்களுக்கு, புத்தி சாதுரியம் அதிகரிக்கும்.

கலைத் துறையினருக்கு, சுக்கிரன் சஞ்சாரம் மிக பலமாக இருப்பதால் எதிர்பார்க்கும் காரியங்கள் நிறைவாக நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு, சூரியன் சஞ்சாரம் பலமற்றுக் காணப்படுவதால் எதிலும் எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்கு, கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வத்துடன் பாடங்களைப் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன். 

திசைகள்: வடக்கு, வடமேற்கு. 

நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை. 

எண்கள்: 2, 5.

பரிகாரம்: அபிராமி அந்தாதி துதி பாடி அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியனின் சஞ்சாரத்தால் கவலை உண்டாகும். சுபச்செலவு ஏற்படும். பிள்ளைகள் சொல்வதைக் கேட்டு நிதானமாகப் பேசுவது நல்லது. பேச்சில் இனிமை சாதுரியத்தால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும்.

தொழில், வியாபாரத்தில் போட்டியைச் சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில், கவனமாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு, சேமிக்கும் திட்டம் தோன்றும்.

 கலைத் துறையினருக்கு, சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மைதரும். அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் தாமதம் நீங்கும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான கவலை நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.

எண்கள்: 1, 3, 6.

பரிகாரம்: சிவன் கோயிலுக்குச் சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் பாக்கியஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். பிரயாணத்தில் தடங்கல் அகலும். செவ்வாய் பார்வையால் காரியங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர், நண்பர்களிடம் கருத்து மோதல்கள் மறையும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை மாறும். உத்தியோகத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். பெண்களுக்கு, நல்ல பெயர் ஏற்படும்.

கலைத் துறையினருக்கு, தங்கள் உடைமைகளைக் கவனமாகப் பாதுகாத்துக்கொள்வது அவசியம். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தை அனுசரித்துச் செல்ல வேண்டும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பச்சை, மஞ்சள்.

எண்கள்: 3, 5.

பரிகாரம்: ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வணங்கிவர ஆரோக்கியம் பெறும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close