[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 23 May, 2019 07:55 am
  • அ+ அ-

மேஷம்: உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு பல வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. ஆடை, ஆபரணங்கள் சேரும்.

ரிஷபம்: எந்தக் காரியத்திலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலைப் பளுவால் மனஉளைச்சல் அதிகரிக்கும். மாலை முதல் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.

மிதுனம்: மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்தி தரும். தாயார் ஆதரித்துப் பேசுவார். பலமுறை யோசித்து காரியங்களில் இறங்குங்கள்.

கடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: கனிவானப் பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும்.

கன்னி: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பீர்கள்.

துலாம்: அதிகம் உழைக்க வேண்டியது வரும். முக்கியப் பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

விருச்சிகம்: உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

தனுசு: எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

மகரம்: குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது அதிக வேகம் வேண்டாம். வெளியூர் பயணம் உண்டு.

கும்பம்: கொடுத்த வாக்குறுதியை உறுதியுடன் நிறைவேற்றுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பணவரவு உண்டு.

மீனம்: உங்கள் அணுகுமுறையில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close