[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 22 May, 2019 08:37 am
  • அ+ அ-

மேஷம்: பணவரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினைகளைத் தீர்க்க அயராது உழைப்பீர்கள். மனைவிவழி உறவினர்களின் உதவி தக்கசமயத்தில் கிடைக்கும்.

ரிஷபம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப்பற்றாக்குறை ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தினர் ஆதரவு உண்டு.

மிதுனம்:  மனஇறுக்கம் குறைந்து கலகலப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். விருந்தினர் வருகை உண்டு.

கடகம்: எதிரிகளின் சூழ்ச்சிகளை சாதுர்யமாக வெல்வீர்கள். கறாராகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கு பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும்.

கன்னி: மனதில் நிலவிய குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாக முடியும்.

விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த தொகையை போராடி வசூலிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். திடீர் பயணம் உண்டு.

தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது. வெளி உணவு, வாயு பதார்த்தங்களைத் தவிர்த்து விடுங்கள்.

மகரம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கும்பம்: சுபநிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். நவீன ரக வாகனம் மற்றும் மின்சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

மீனம்: கடின உழைப்பால் காரியங்களைச் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் நீங்கி அமைதி ஏற்படும். சமயோசிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். பணவரவு உண்டு.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close