[X] Close

கணவன் மனைவி சண்டையும் சகடை யோகமும்!


jodhidam-airvom-2-40

  • kamadenu
  • Posted: 19 May, 2019 10:10 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 40: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

சகடை யோகத்தின் தொடர்ச்சியாக இன்னும் சிலவற்றைப் பார்க்கலாம்.

சென்ற பதிவில் சில முக்கியத் தகவல்களைப் பார்த்தோம். இப்போது அதைவிட முக்கியமான தகவல்களைப் பார்க்க இருக்கிறோம்.

ஒரு நினைவூட்டல்... சகடை என்றால் 6,8 ஆக கிரகங்கள் அமர்ந்து அதன் பலம் இழத்தல், தடை தாமதங்களை உண்டாக்குதல் என்று பார்த்தோம். நினைவிருக்கிறதுதானே.

ஒரு ஜாதகத்தில் லக்னமும் ராசியும் 6-8 ஆக இருந்தால்... வாழ்க்கை முழுவதும் போராட்டம்தான்.

உடனே பயந்து போய்விடாதீர்கள். தீமை செய்யும் சகடை யோகமும் உண்டு, அதேசமயம் நன்மை செய்யும் சகடை யோகமும் உண்டு.

திருமணப் பொருத்தத்தின் போது, நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே முக்கியம் என்று இன்னமும் நிறைய பேர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்.... திருமணப் பொருத்தம் பார்க்கும் போது, பெண்ணின் லக்னம் மற்றும் ராசியானது, ஆணின் லக்னம் மற்றும் ராசி 6-8 ஆக இருக்கக்கூடாது.

அப்படி இருந்தால் இருவருக்குமான பிணைப்பு, அன்பு, காதல், விட்டுக் கொடுக்கும் தன்மை என எதுவும் இருக்காது. விரைவிலேயே பிரிவுக்கும் வழிவகுக்கும். 

இந்த சகடை யோகத்தில் முதலில் தீமை செய்யும் சகடை எது என பார்க்கலாம்.

(நான் முதலில் குறிப்பிட்டதுபோல் உங்கள் சுய ஜாதகத்திற்கும், திருமணப் பொருத்தத்திற்கும் உண்டான விஷயங்களையே தரப்போகிறேன்).

மேஷ லக்னம் கன்னி ராசியாக இருந்தால் வாழ்க்கை கடும் போராட்டமாக இருக்கும். எந்த ஒரு விஷயமும் போராடினால்தான் கிடைக்கும். அப்படிக் கிடைப்பதும் மன நிறைவைத் தராது.

ரிஷப லக்னம் துலாம் ராசியாக இருந்தால், தன் பிரச்சினைகளுக்கு தானே காரணமாவார். தன் உடல் நலம் கெட தானே காரணமாய் இருப்பார். எதுவும் கேட்டதும் கிடைக்கும். ஆனால் கிடைத்ததை தன் அலட்சியத்தால் கைவிடுவார். 

மிதுன லக்னம் விருச்சிக ராசி என இருப்பின், வாழ்க்கை முழுவதும் போராட்டம்தான். எதுவும் நிரந்தம் இல்லை. தன்னை அறிவாளியாக நினைத்து ஒவ்வொரு விஷயத்தையும் கோட்டை விடுவார்.

கடக லக்னம் தனுசு ராசி என்றால், அவசர முடிவுகளால் ஏமாற்றத்தைச் சந்திப்பார்கள். நல்ல வாய்ப்புகளையும் தன் அவசர முடிவால் இழந்து வருந்துவார்கள்.  

சிம்ம லக்னம் மகர ராசி, இறுமாப்பு, அலட்சியம், வீண் பிடிவாதம், எப்படி அணுக வேண்டும் என்று கூட தெரியாமல் மரியாதை இழப்பவர்கள்,

கன்னி லக்னம் கும்ப ராசி :  தனக்கு எல்லாம் தெரியும் என்ற தலைக்கனம், யாரையும் எவரையும் மதிக்காத குணம் ஆகியவற்றால்  நல்ல நட்பு, குடும்ப உறவுகள் என அனைத்தையும் பகையாக ஆக்கிக்கொள்வார்கள்.

துலா லக்னம் மீன ராசி:- சுய நலமாக இருந்தே அனைத்தையும் இழப்பவர்கள். காலம் கடந்து ஞானம் வரும். ஞானம் வரும்போது எவரும் அருகில் இருக்க மாட்டார்கள்.

விருச்சிக லக்னம் மேஷ ராசி :- யார் உதவி கேட்டாலும் உதவுவார்கள். செய்த உதவியை சொல்லிக்காட்டி தன் மரியாதையை இழப்பார்கள்.  சுருக்கெனத் தைப்பது போல் பேசி, விஷ வார்த்தைகளைக் கக்குவார்கள்.  இதன் காரணமாக இவர்களிடம் யாரும் நெருங்கக்கூட மாட்டார்கள். 

தனுசு லக்னம் ரிஷப ராசி:- அறிவு, ஞானம், புத்திசாலித்தனம் என எல்லாம் இருந்தாலும் ரொம்பவே கௌரவம் பார்த்து நல்ல வாய்ப்புகளை இழப்பார்கள்.

மகர லக்னம் மிதுன ராசி: - நல்ல அறிவாளிகளாகத்தான் இருப்பார்கள். ஆனால் குறுக்கு வழியில் அதைப் பயன்படுத்துவதால் தன் சுயத்தை இழப்பவர்கள்.

கும்ப லக்னம் கடக ராசி:- இவர்களுக்கு அறிவுரை சொல்வதே வேஸ்ட்.  ஏனெனில் அறிவுரை கூறுபவரையே அவமானபடுத்துவார்கள். போலி கௌரவத்தால் வாழ்க்கையை தொலைப்பார்கள்.  

மீன லக்னம் சிம்ம ராசி- கௌரவம் கௌரவம் என பார்த்தே ஏமாந்து நிற்பவர்கள். இவர்களைத் தேடி வரும் வாய்ப்பை மட்டுமே பயன்படுத்துவார்கள். தானாக எதையும் தேடமாட்டார்கள். இந்த அலட்சியமே வாழ்க்கைப் போராட்டமாக இருக்கும்.

இன்னும் இந்த யோகம் குறித்த தகவல்கள் ஏராளம்.

அடுத்த பதிவில் பார்ப்போம்.

- தெளிவோம்

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close