[X] Close

அக்கம்பக்கத்தாருடன் சண்டை; உங்க ஜாதகத்துலயே இருக்கா?


jodhidam-arivom2-39

  • kamadenu
  • Posted: 16 May, 2019 12:30 pm
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 39: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே. .

நாம் அடுத்து பார்க்கப்போவது “சகடையோகம்”

சகடை என்றால் கிணற்றில் நீர் இறைக்க பயன்படுத்தும் சாதனம், அதாவது குடத்தைக் கட்டி கிணற்றுக்கு உள்ளேயும் மேலேயும் இழுக்கிறோமே அதுமாதிரி வாழ்க்கையும் நிலையற்றதாக உயர்வும் தாழ்வும் மாறிமாறி இருக்கும் நிலையே சகடையோகம்.   

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு  இரண்டாமிடம் பணம் வரும் ஸ்தானம். அதுபோல் 11ம் இடம் லாப ஸ்தானம் அல்லது சேமிப்பு ஸ்தானம்.

இந்த இரண்டு வீட்டின் அதிபதிகளும் நல்ல நிலையில் இருந்தால் சம்பாத்தியமும் நன்றாக இருக்கும். சேமிப்பும் நன்றாக இருக்கும்.

மாறாக இருவரும் மறைவு ஸ்தானங்களில் இருந்தாலும் அல்லது சகடையோகமாக இருந்தாலும் சம்பாதித்த பணம் சேமிக்க முடியாமல் கரைந்து காணமல் போகும்.

முதலில் சகடை என்றால் என்ன?  என்பதைப் பார்ப்போம்.

உங்களுக்கு யோகம் தரக்கூடிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று 6,8 ஆக இருந்தால் அது சகடையோகம் ஆகும். ஒரு கிரகத்திற்கு மற்ற கிரகம் 6 ஆக இருந்தால் மற்ற கிரகம் 8 ஆகத்தான் வரும்.

இப்படி இருந்தால் அது சகடை யோகம் ஆகும். ஜாதகத்தில் 3,6,8,12 இந்த இடங்கள் மறைவு ஸ்தானங்களாகும். இதில் 6, 8 இடங்கள் முழு மறைவு மற்றும் பாதகத்தைச் செய்யக்கூடியது.

இப்போது புரிந்திருக்கும், கிரகங்கள் 6,8 ஆக இருந்தால் மறைவு பெறும்.  மறைந்த கிரகங்கள் தன் பலத்தை இழக்கும். தான் செய்ய வேண்டிய பலன்களைத் தராமல் முடங்கிப்போகும்.

ஆனாலும் நன்மைகளைத் தந்து விட்டே பாதிப்பைத் தரும், அது ஏன்? ஒரு நன்மையை தந்தால்தான் அதை கெடுத்து பாதிப்பைத் தரமுடியும். அதனால்தான் நன்மையைக் கொடுத்துவிட்டு கெடுக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. சகடையின் தன்மையும் இதுதானே, அதாவது ஏற்றம் இறக்கம் என்பது தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்,

இதில் மிக முக்கியமானது... 7ம் இடம் என்னும் களத்திர ஸ்தானமும், 2ம் இடம் என்னும் குடும்ப ஸ்தானமும் சகடையாக இருந்தால் குடும்பம் அமையாது. அப்படியே அமைந்தாலும் நிம்மதி என்பதே இருக்காது. சதா சர்வ காலமும் சண்டை சச்சரவு என்றே இருக்கும்.

அதே மாதிரி 4ம் இடம் என்னும் வீடு மனை ஸ்தானமும், 7ம் இடம் என்னும் கூடி வாழும் ஸ்தானமும் சகடையோகமாக இருந்தால், அடிக்கடி வீடு மாற்றம், அக்கம்பக்கத்தினரோடு சதா சண்டை என்றே இருக்கும், சொந்த வீடு இருந்தாலும் அதில் வாழமுடியாமல் வாடகை வீட்டில் இருக்க வைப்பது என்பதெல்லாம் நடக்கும்.

இப்படி எல்லா பாவகங்களும் சகடையாக இருந்தால் நிம்மதி என்பதே இல்லாமல் விரக்தி நிலையே ஏற்படும்.

இதற்கெல்லாம் ஓரே தீர்வு சிரஞ்ஜீவி அனுமன் மட்டுமே. அனுமன் வழிபாடும், அனுமன் சாலிசா படிப்பதும், அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடைமாலை சாற்றி வழிபடுவதும் மட்டுமே இந்த சகடை யோகத்தைப் போக்கி மன நிம்மதியைத் தரும். ஆஞ்சநேயர், ஸ்ரீராமரின் மனக் கலக்கத்தையேப் போக்கியவர். எனவே இவரை வணங்கி வந்தாலே எல்லா நிம்மதியும் பெறலாம்.

 - தெளிவோம்

 

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close