[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 13 May, 2019 09:56 am
  • அ+ அ-

மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்கள், உறவினர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள்.

ரிஷபம்: எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் உயரும். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை சரிசெய்வீர்கள்.

கடகம்: பொறுமையாக, சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங் களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும்.

சிம்மம்: பழைய கசப்பான சம்பவங்கள் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். எக்காரியத்திலும் நிதானம் தேவை.

கன்னி: சிபாரிசு செய்வது, ஜாமீன் கையெழுத்திடுவது ஆகியவை வேண்டாம். பழைய பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். பணவரவு, பொருள் வரவு உண்டு. வாகனம் செலவு வைக்கும்.

துலாம்: பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். பேச்சில் பொறுமை அவசியம். நெருங்கியவருக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.

விருச்சிகம்: எவ்வளவு பிரச்சினைகள், இடையூறுகள் வந்தாலும் துணிச்சலோடு சமாளிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

தனுசு: உணர்ச்சிபூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். உறுதியாக செயல்பட்டு முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகளின் போக்கு நம்பிக்கை தரும்.

மகரம்: உங்கள் பலம், பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது. பலமுறை முயன்ற பிறகே, காரியங்கள் முடிவுக்கு வரும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.

கும்பம்: குடும்பத்தில் ஆரோக்கியமான வாக்குவாதம் வந்து போகும். பழுதான வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.

மீனம்: தடைகளைப் பொருட்படுத்தாமல் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close